★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★
Showing posts with label கோரிக்கைகள். Show all posts
Showing posts with label கோரிக்கைகள். Show all posts

Thursday, November 17, 2016

தூரி இராமசாமித்தேவர் அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்திட மறத்தமிழர் சேனை கோரிக்கை

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் சேவகராகவும் வாழ்ந்து மறைந்த பெரியவர் தூரி இராமசாமித் தேவர் அவர்களின் பிறந்த நாளில் அரசு விழா எடுக்கவும், அவரது நினைவிடத்தில் மணிமண்டபம் அமைத்திடவும் மறத்தமிழர் சேனை தலைவர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு இன்று (17.11.16) கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் “இந்திய நாடு ஆங்கிலேயர்களின் மேலாதிக்கத்திற்கு கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த பொழுது சுதந்திர உணர்வோடு போராடி – விடுதலை அடைந்திட பல போராட்டங்களையும், உயிர்த் தியாகங்களையும் அதிகஅளவில் நடத்தியதோடு, சிறை வாழ்வையும் முழு மனதோடு ஏற்றுக் கொண்டவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். இதனை தாங்கள் பல முறை தங்களது சுதந்திர தின உரைகளில் குறிப்பிட்டுள்ளீர்கள். அந்தவகையில் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், மு.தூரி கிராமத்தைச் சார்ந்த எம்.ஆர்.இராமசாமித்தேவர் அவர்கள் இந்திய சுதந்திர உணர்வோடு பலமுறை ஆங்கிலேயர்களுக்கு எதிராக செயல்பட்டு சிறை சென்று இருந்துள்ளார்.