★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★
Showing posts with label அழைக்கிறோம். Show all posts
Showing posts with label அழைக்கிறோம். Show all posts

Friday, June 17, 2016

முத்துவடுகநாதத் தேவர் 244 வது வீரவணக்க விழா அழைப்பு

சின்ன மறவர் நாடு, சிவகங்கை சீமை அரசாண்ட இரண்டாவது மாமன்னர் சசிவர்ண முத்துவடுகநாதப் பெரிய உடையாத் தேவர் அவர்களும், இளைய இராணி கெளரி நாச்சியார் அவர்களும் 1772 ஆம் ஆண்டு காளையார் கோவிலில் நடந்த போரில் நயவஞ்சகமாக ஆங்கிலேய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களது நினைவு நாள் வீரவணக்க நாளாக ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அரசியல் கட்சித்தலைவர்கள், அமைச்சர்கள், முக்குலத்தோர் கட்சித்தலைவர்கள், முக்குலத்தோர் அமைப்புகள், மறவர் அமைப்புகள் மற்றும் மன்னர் வம்சா வழியினர் பங்கேற்று விழாவினை சிறப்பித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது 25.06.2016 அன்று காலை பத்து மணி முதல் மாலை வரை மன்னரது 244 -ஆவது ஆண்டு வீரவணக்க நாள் விழா காளையார் கோவிலில் அமைந்துள்ள முத்துவடுகநாத தேவர் மாலையீட்டில் நடைபெற உள்ளது.

Monday, April 2, 2012

நான் ஒரு குற்றப் பரம்பரையினன் . . .

                          நான் ஒரு குற்றப் பரம்பரையினன் என்று மார்தட்டிச் சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன். ஏனென்றால் இந்த சட்டம்தான் எங்களின் எதிர்ப்பு அரசியலின் வீரத்தையும், விவேகத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தியது. வருகின்ற ஏப்ரல்-03 அன்று பெருங்காமநல்லூர் துப்பாக்கிச் சூடு நினைவு நாள்.

                          இயற்கையின் இயக்கத்தில் இயங்கிக் கொண்டிருந்த சமூக, பழங்குடிகளில் ஒன்றான பிரமலைக் கள்ளர் இனத்தின் மீது சுரண்டல்களின் ஒட்டுமொத்த பழியையும் சுமத்தி சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்ததிலிருந்து, ஆண்ட பரம்பரையின் ஆளுமை வேகத்தை அடக்கி வைப்பதற்காக சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம்தான் குற்றப்பரம்பரைச் சட்டம்.

                         
                              காடுகட்டி நாடாண்ட கள்ளர்கள் கைநாட்டு வைப்பதா ? அகிலம் ஆண்ட நம் மீது கரும்புள்ளி வைத்திட, வந்தேறிக் கூட்டத்தின் வழிகாட்டுதலின் படி, வியாபார நோக்கில் வந்து நம்மை அடிமைப்படுத்திய வெள்ளையன் கொண்டு வந்த  குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து, மானத்தைக் காக்க மரணத்தை முத்தமிட்ட பெருங்காமநல்லூர்  மாமறவர்கள் 17 பேர்களையும்  வணங்கி, வீர வணக்கம் செலுத்துவோம்.

                                20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே, உலக அரசியல் அரங்கில் ஆங்கிலேய அரசுக்கு அச்சம் ஏற்படும் நிலை வந்தது. நாட்டுப் பற்றுடன் அரசாங்கத்தை எதிரியாக நினைத்து சட்டங்களையும் அதிகாரங்களையும் வெறுத்து வரும் தன்னரசு பற்றுதல் கொண்ட மானமுள்ள மறத்தமிழர் சேனைக் கூட்டங்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் சட்டப் பூர்வமாக ஒடுக்கி வைத்திருக்க முற்பட்டனர்.

                    அதன் காரணமாகவே இராமநாதபுரம், திருநெல்வேலி ஜில்லாக்களில் பூலம், ஆப்பநாடு, முதுகுளத்தூர் முதலிய இடங்களில் ரேகைச் சட்ட அமுல் பிரகடனம் செய்யப்பட்டது. இன்றைய தமிழீழம் முள்வேலி முகாம்களைப் போல 1930 களில் 1,35,000 பேர்  கைரேகைகள் பதியப்பட்டு தடுப்புக் காவலில் கண்காணிக்கப் பட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் காங்கிரசும், திராவிட இயக்கத்தினரும் அதிகாரத்திற்காக ஆங்கிலேயரிடம் கை கட்டி நின்றுகொண்டிருந்தனர்.                    

Thursday, March 29, 2012

பெருங்காமநல்லூர் துப்பாக்கிசூடு வீரவணக்க நாள்

பெருங்காமநல்லூர் துப்பாக்கிசூடு வீரவணக்க நாள்  விழா

Wednesday, March 21, 2012

வள்ளல் பொன்.பாண்டித்துரைத் தேவர் பிறந்த நாள் விழா

றத்தமிழர் சேனை கமுதி ஒன்றியத்தின் சார்பில்  நான்மாடக் கூடல் மதுரை மாநகரில், நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த  வள்ளல், பாலவநத்தம் மன்னர்  பொன்.பாண்டித்துரைத் தேவர் அவர்களின்  பிறந்த நாள் விழா கூட்டம் இராமநாதபுரம் மாவட்டம் கமுதி தேவர் மகாலில் 20-03-2012 செவ்வாய்கிழமை  அன்று மாலை 3 00  மணியளவில் மறத்தமிழர் சேனை  கமுதி ஒன்றிய செயலாளர் S.ராமசெல்வம் தலைமையில் நடைபெற்றது.


Tuesday, December 20, 2011

Rani Velu Nachiyar, ராணி வேலுநாச்சியார் அவர்களின் 215 வது நினைவேந்தல் விழா

வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி ஆவார்.
                      
                              எத்தனையோ சாதனை மங்கைகளை தமிழ் வரலாறு பார்த்திருக்கிறது. ஆனால் வீர மங்கை என்றால் அவர் ஒருவர்தான்: வேலு நாச்சியார். வீரம் என்றால் சாதாரண வீரம் அல்ல, மாபெரும் படைகளை எதிர்கொண்டு வீழ்த்திய வீரம்.  

                         சிவகங்கை சீமை ஆண்ட வீரமங்கை வேலு நாச்சியார்  அவர்களின் 215 வது நினைவேந்தல் விழா, வருகின்ற டிச-25 அன்று சிவகங்கை நினைவிடத்தில் நடைபெற உள்ளது. மறத்தமிழர் சேனை அந்தநாளை  "வீர மங்கையர் தினம்" மாக கொண்டாடி வருகிறது. அதனை முன்னிட்டு தமிழகமெங்கும் எழுதப்பட்ட சுவர் விளம்பரம்.
 


Thursday, December 1, 2011

வள்ளல் பொன்.பாண்டித்துரைத் தேவர் 100 வது நினைவுநாள்

"செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
 செயலினை மூச்சினை உனக்கு அளித்தேனே!"
                  என்ற பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை வரிகளுக்கு ஓர் உதாரணம் உண்டென்றால் அது  வள்ளல் பாண்டித்துரைத்தேவர் மட்டும் தான்.

                   "பாலவநத்தம் ஜமீன்தாராக விளங்கிய பாண்டித்துரைத்தேவர், வள்ளல் பொன்னுசாமித்தேவர்  - பர்வதவர்த்தினி நாச்சியார் தம்பதிக்கு 1867ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி இராமநாதபுரம், இராஜவீதி "கவுரி விலாசம்" என்ற இல்லத்தில் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் உக்கிரபாண்டியன். நாடறிந்த பெயரோ  பாண்டித்துரைத் தேவர். அழகர் ராஜு எனும் புலவர் இளம் பருவம் முதல் பாண்டித்துரைத் தேவருக்கு தமிழ் அறிவை ஊட்டி வந்தார். வக்கீல் வெங்டேசுவர சாஸ்திரி ஆங்கில ஆசிரியராய் இருந்தார். பாண்டித்துரைத் தேவர் தமிழ், ஆங்கில மொழிகளில் புலமை பெற்றார்.

                    சிவ பக்தராகத் திகழ்ந்த பாண்டித்துரைத் தேவர் தந்தையின் அரண்மனையை அடுத்து மாளிகை ஒன்றைக் கட்டினார். சிவபெருமான் மீதான பக்தி காரணமாக அம்மாளிகைக்குச் "சோமசுந்தர விலாசம்" என்று பெயரிட்டார்.
1901ம் ஆண்டு சொற்பொழிவாற்றுவதற்காக வள்ளல் பாண்டித்துரைத்தேவர் மதுரை வருகை தந்தார். அப்போது, "திருக்குறள் பரிமேலழகர் உரை" நூலை, விழா ஏற்பாடு செய்த அமைப்பாளரிடம் கேட்டார் தேவர். எங்கு தேடியும் அந்நூல் கிடைக்காதது கண்டும்,  தேவரின பாண்டிய மன்னர்கள் முச்சங்கம் கண்டு முத்தமிழ் வளர்த்த மதுரையில், திருக்குறள் பரிமேலழகர் உரை கிடைக்காதது கண்டும், தமிழ்ப் பற்றுள்ள தேவரின் மனம் வருந்தியது.


              தேவர் உடனடியாக, தமிழ் வளர்த்த மதுரையில் பழந்தமிழ் நூல்கள் அனைத்தையும் வெளியிட விரும்பி நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவினார். . தமிழ்ச் சங்கம் சார்பில் தரமான தமிழ்க் கல்லூரியும் அமைத்தார். பாண்டித்துரைத் தேவர் தலைமையில் 1901ம் ஆண்டு மே 24ம் தேதி, மதுரை மாநகரில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவ, பெரும்புலவர்களின் ஆலோசனைக் கூட்டம் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் கூட்டப்பட்டது.
நற்றமிழ் வளர்த்த மதுரையில் பாண்டித்துரைத்தேவர், தலைவராக வீற்றிருக்க 1901ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி நான்காம் தமிழ்ச்சங்கம் மலர்ந்து, தமிழ் மணம் வீசியது.

அந்நாளில்தான் பழந்தமிழ்க் கருவூலமாக, பாண்டியன் நூலகமும் உருவானது. "தமிழ் ஆய்வு மையம்" அமைத்த பாண்டித்துரைத்தேவர், மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் சார்பில், ஆய்வு நுணுக்கமும், ஆழமான புலமையும் மிக்க பெரும் புலவர்களின் கட்டுரைப் பெட்டகமாக 1903ல் "செந்தமிழ்" என்னும் நற்றமிழ் மாத இதழும் மலரச் செய்தார். அந்த "செந்தமிழ்" ஏடு நூற்றாண்டு விழா கண்ட ஏடு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சமயத்தில் பாண்டித்துரைத் தேவர் வெளியிட்ட ஓர் அறிக்கை மூலம், பாரதியாரின் "செந்தமிழ் நாடென்னும் போதினிலே" பாட்டு பிறந்த கதையை பாராதிதாசனின் "பாரதியாரோடு பத்தாண்டுகள்" நூல் வாயிலாக அறியலாம்.
மதுரைத் தமிழ்ச் சங்கத்தை முன்னின்று நடத்திக் கொண்டு இருந்த பாண்டித்துரைத் தேவர் செய்தி ஏடுகளில் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதன் கருத்து பின் வருமாறு:-

தமிழ்நாட்டைப் பற்றி சுருக்கமாக எல்லாரும் பாடக் கூடிய மெட்டில் தமிழ்த் தாய் வாழ்த்து எழுதி அனுப்புக. நல்லதற்குப் பரிசு தருகின்றோம் என்பது.
அந்த போட்டியில் கலந்து கொள்ளும்படி நானும் வாத்தியார் சுப்பிரமணியன் முதலியவர்களும் பாரதியாரைக் கேட்டோம்.

அவர் முதலில் மறுத்தார். எங்களுக்காகவாவது எழுதுக என்றோம்
"செந்தமிழ் நாடென்னும் போதினிலே" என்று தொடங்கி பாட்டொன்று எழுதினார் என்று குறிப்பிடுகிறார் பாரதிதாசன்.
சேது சமஸ்தானப் பெரும் புவலர்களாக விளங்கிய;
தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர், இரா.இராகவையங்கார், மு.இராகவையங்கார், அரசன் சண்முகனார், இராமசாமிப்புலவர், சபாபதி நாவலர், சிங்காரவேலு முதலியார், நாராயண அய்யங்கார், சுப்பிரமணியக் கவிராயர், சிவஞானம் பிள்ளை, சிவகாமி ஆண்டார், யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர், புலவர் அப்துல்காதிர் இராவுத்தர், எட்டயபுரம் சாமி அய்யங்கார், பரிதிமாற்கலைஞர், அரங்கசாமி அய்யங்கார், சி.வை.தாமோதரம் பிள்ளை ஆகியோரின் தரமான படைப்புகள் வெளிவர, மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடான "செந்தமிழ்" ஏடே உதவியது.

உலக மொழிகளிலேயே, தமிழ்மொழி, செம்மொழி மட்டுமல்ல, உயர்தனிச் செம்மொழி என்று முதன் முதலாக ஆதாரத்துடன் ஆய்வு செய்து வெளியிட்டவர், மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் ஆதரவு பெற்ற பரிதிமாற்கலைஞர் ஆவார்.
அழுத்தமான தமிழ்ப் பற்றின் காரணமாக "சூரிய நாராயண சாஸ்திரி" என்ற தன் வட மொழிப் பெயரை "பரிதிமாற் கலைஞர்" என்று பைந்தமிழில் மாற்றிக் கொண்டவர். மேலும் முதன் முதலாக "தமிழ் மொழி வரலாறு" படைத்த சிறப்பும் உடைய பெரும்புலவரே பரிதிமாற்கலைஞர்.

மேலும் சென்னைப் பல்கலைக்கழத்திலிருந்தே தமிழ்ப்பாடத்தை அகற்ற, வெள்ளை அரசு திட்டமிட்டபோது, அதைத் தடுத்து நிறுத்திய பெருமை, பாண்டித்துரைத் தேவர் அமைத்த மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தையே சாரும்! மதுரைத் தமிழ்ச்சங்கம் மூலம் உயர்தனிச் செம்மொழியாம் தமிழ், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து இருக்க உரிய தீர்மானம் நிறைவேற்றப் பாடுபட்டவர் பரிதிமாற்கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

"தமிழ்ச் செம்மொழி" என்று அன்றே மதுரைத் தமிழ்ச்சங்கம் மூலம் ஆய்வு செய்து பரிதிமாற் கலைஞர் வெளியிட ஆதாரமாக, ஆதரவாக விளங்கிய பாண்டித்துரைத் தேவரும், பாஸ்கரசேதுபதியும் நன்றியுடன் போற்றத்தக்கவர்கள்.
ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து சுதேசி கப்பல் ஓட்டிய வ.உ.சியின் சுதேசி கப்பல் நிறுவனத்துக்கு நிதி உதவி வழங்கிய பாண்டித்துரைத் தேவர் பின்னர் அந்த நிறுவனத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றார்.

சிவஞானபுரம் முருகன் காவடிச் சிந்து, சிவஞான சுவாமிகள் பேரில் இரட்டை மணிமாலை, இராஜ இராஜேஸ்வரி பதிகம் தனிப்பாடல்கள் உள்ளிட்டவற்றை இயற்றியுள்ளார் பாண்டித்துரைத் தேவர்.
தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை. செத்தாலும் கூட செந்தமிழாய் பூப்பார்கள். அப்பூக்களில் ஒருவர் பாண்டித்துரைத் தேவர்.

அத்தகைய  மாமறவனின் 100  வது நினைவுநாள் கூட்டம் நாளை ( 02-12-2011 )  காலை 10.00 மணியளவில் மதுரை தமிழ்ச்சங்கம் ரோட்டில்,  மறத்தமிழர் சேனை சார்பில் மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் தலைமையில் நடைபெற உள்ளது. நிர்வாகிகளும், இன உணர்வாளர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு நான்மாடக் கூடலிலே நான்காம் தமிழ்ச்சங்கம் கண்ட வள்ளல்  பொன்.பாண்டித்துரைத் தேவர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டுகிறோம்.

-மறத்தமிழர் சேனை 

Thursday, August 25, 2011

வேங்கைகள் வீரவணக்க நாள் பேரணி-பொதுக்கூட்டம்

1957 ம் வருடம் கீழத்தூவல் ( keezhaththooval ) மண்ணில் காமராஜ் நாடாரின் வழிகாட்டுதலின்படி கண்ணைக்கட்டி, கைகளைக்கட்டி சுட்டுக்கொல்லப்பட்ட கீழத்தூவல் வேங்கைகள் ஐவருக்கு  வீரவணக்க நாள் பேரணி-பொதுக்கூட்டம் மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் தலைமையில் நடைபெற உள்ளது.

செப்-14 மாலை 4 .00 மணியளவில் நடைபெறுகின்ற பேரணியிலும், மாலை 6.00 மணியளவில் நடைபெறுகின்ற பொதுக்கூட்டத்திலும் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் P.V.கதிரவன் அவர்கள், திரைப்பட நடிகர் கருணாஸ் அவர்கள், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்கள், பாரதிய பார்வர்டு பிளாக் தலைவர் முருகன்ஜி அவர்கள், தமிழ்நாடு தேவர் இளைஞர் பேரவை தலைவர் எஸ்.ஆர்.தேவர் அவர்கள்,  தமிழ்நாடு தேவர் பார்வர்டு பிளாக் தலைவர் இரா.ஜெயச்சந்திர தேவர் அவர்கள், தேவர் தேசிய பேரவை தலைவர் K.C.திருமாறன் அவர்கள்,வீரகுல அமரன் இயக்க தலைவர் கி.இரா.முருகன் அவர்கள், முக்குலத்தோர் எழுச்சி கழகம் தலைவர் V.K.கவிக்குமார் அவர்கள், வீரத்தமிழர் முன்னணி தலைவர் மு.இரா. சிறுவயல் ரமேஷ் அவர்கள், கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்துகிறார்கள்.