★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★
Showing posts with label ரிபெல். Show all posts
Showing posts with label ரிபெல். Show all posts

Saturday, March 31, 2018

ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி 258 வது பிறந்த நாள் விழா


இராமநாதபுரம் சீமை அரசாண்ட மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் 258 வது பிறந்த நாள் விழா அரசு விழாவாக ஆண்டுதோறும் மார்ச் -30 அன்று நடத்தப்பட்டு வருகிறது. ஆங்கிலேய ஆட்சியாளர்களின் அத்துமீறல்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மாமறவர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் பிறந்த நாளை மதுரை மாவட்ட மறத்தமிழர் சேனை வெகு விமரிசையாக கொண்டாடியது.

மதுரை மாவட்ட செயலாளர் து.தினேஷ் அவர்களின் தலைமையில் 30.03.2018 அன்று மதுரையில் நடைபெற்ற விழாவிற்கு மாநில துணை பொதுச்செயலாளர் மு.முத்துக்குமார் அவர்களும் மாநில துணை பொருளாளர் சுவ.அருணாச்சலம் அவர்களும் முன்னிலை வகித்தனர். மதுரை மாவட்ட தலைவர் சு.மணிகண்டத் தேவர் வரவேற்புரை ஆற்றிட மதுரை மாவட்ட பொருளாளர் பெ.திருப்பதி தேவர் இறுதியில் நன்றியுரை ஆற்றினார்.

மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் சு.புதுமலர் பிரபாகரன் அவர்கள் கலந்து கொண்டு மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மற்றும் மதுரை மாவட்ட இளைஞர் சேனை செயலாளர் கி.உலகநாதன், பழங்காநத்தம் பகுதி இளைஞர் சேனை செயலாளர் இரா.அருள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு மாமன்னரின் படத்திற்கு மரியாதை செலுத்தினார்கள்.

Thursday, February 11, 2016

மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி சிலை திறக்கப்பட்டது


பெரிய மறவர் நாடு என வரலாறு போற்றும் இராமநாதபுரம் சீமையானது தனது வரலாற்றை செங்குருதியால் எழுதிக்கொண்டு, மரணத்திற்கு அஞ்சாத பல மாமறவர்களை தந்திருக்கிறது. அப்படிதான் 1760 ஆம் வருடம் மார்ச்-30 இல் பிறந்த முத்து விஜயராஜ முத்துராமலிங்க சேதுபதி தமது 12 வயதில் இராமநாதபுரம் மறவர் சீமையின் மன்னராக முடிசூட்டப்பட்டவர் ஆவார். ஆங்கிலேயர்கள், நவாபுகளின் கட்டற்ற வணிகத்தை முடக்க விற்பனை வரி, சுங்கவரி விதித்தவர், அந்நிய மேலாதிக்கத்தை கடுமையாக எதிர்த்ததன் விளைவாக 2-06-1772 இல் தனது தாயார், சகோதரியோடு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். பத்தாண்டுகள் சிறையிலேயே வாடிய மன்னரின் தாயார் சிறையிலேயே மரணமடைந்தார்.


மறவர் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பியதும் அஞ்சிய ஆங்கிலேயர்கள் 1782 இல் மன்னரை விடுதலை செய்தனர். மீண்டும் நல்லாட்சி செய்யத்துவங்கிய இவரது காலத்தில்தான் உலகப்புகழ் பெற்ற இராமேஸ்வரம் மூன்றாம் பிரகாரம் கட்டப்பட்டது. அதனைப்போலவே கடுகு சந்தை, தேவிபட்டினம், கோட்டைப்பட்டிணம் அன்னசத்திரங்கள் கட்டப்பட்டன. ஆயிரமாயிரம் பரப்பளவு கொண்ட நிலங்கள் முறையாக அளவிடப்பட்டன. மீண்டும் வலுவடையத் துவங்கிய மறவரது ஆட்சியை கண்டு அஞ்சிய ஆங்கிலேயர்கள் மன்னரைக் கைது செய்து திருச்சி சிறையிலும், பின்பு சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலும் சிறை வைத்த நிலையில் 1809 வருடம் ஜனவரி 23 ஆம் நாள் சென்னை சிறையிலேயே உயிர் துறந்த மாமன்னரை ரிபெல் என மக்கள் அழைக்கத் துவங்கினர்.

  இந்திய சுதந்திர போராட்ட வீரரும், இராமநாதபுரம் சீமையை அரசாண்ட மாமன்னரும், ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்து தொடர்ந்து 24 ஆண்டுகள் திருச்சி, சென்னை சிறைகளில் அடைக்கப்பட்டு சிறையிலேயே உயிர் நீத்தவருமான ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் புகழைப் போற்றும் விதமாக 1990 ஜனவரி 23 ஆம் நாள் தமிழக சட்டசபையில் 181 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், தமிழக அரசு அவரது பிறந்த நாளை அரசு விழாவாக தொடர்ந்து கொண்டாடி வருகிறது.

Friday, September 25, 2015

ரிபெல் சிலை திறக்க மறத்தமிழர் சேனை வழக்கு

ந்திய சுதந்திர போராட்ட வீரரும், இராமநாதபுரம் சீமையை அரசாண்ட மாமன்னரும், ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்து தொடர்ந்து 24 ஆண்டுகள் திருச்சி, சென்னை சிறைகளில் அடைக்கப்பட்டு 1809 ஜனவரி 23 அன்று செயிண்ட் ஜார்ஜ் கோட்டை சிறையிலேயே உயிர் நீத்தவருமான ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் புகழைப் போற்றும் விதமாக தமிழக அரசு அவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடி வருகிறது. மேலும், கடந்த 21.12.2012 அன்று வெளியிட்ட அரசாணை (அ.எண்:683) மூலம் ரூ.4,51,620/- ஒதுக்கீடு செய்யப்பட்டு இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக புல எண்.320-ல் எட்டு அடி உயரமுள்ள வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.