Tuesday, June 2, 2015
Thursday, May 14, 2015
மீத்தேன் கிணறுகள் அமைக்க எதிர்ப்பு
இராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்கட்டமாக
22 இடங்களில் ONGC மூலம் ‘மீத்தேன்’ எடுக்கும் பணி துவங்கப்பட உள்ளது. இன்று
(14.05.15) காலை 10.00 மணியளவில் கருத்துக்கேட்பு கூட்டம் இராமநாதபுரம் ஆட்சியர்
க.நந்தகுமார் தலைமையில் மாவட்ட
சுற்றுச்சூழல் அலுவலர் ராஜேந்திர பாபு, உதவி ஆட்சியர் வினித்
முன்னிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழகத்தின் இயற்கை வளமும், கனிம வளங்களும் முன்னமே சிதைக்கப்பட்டு
வருகின்றன. இராமநாதபுரம்
மாவட்டம் கடும் வறட்சியான பகுதியாகவும், சீமைக்கருவேல மரங்களின் கொடிய ஆக்கிரமிப்பால் நிலத்தடி நீர்மட்டமும்
குறைந்து பெருமளவில் விவசாயமும் அழிந்து
வருகிறது. இந்நிலையில், வளர்ச்சித் திட்டம் என்கிற பெயரில்
மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதகம் ஏற்படும் வகையில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் விவசாய
நிலங்களை கைப்பற்றி கிணறுகள் அமைப்பது மேலும் பல இடர்களை ஏற்படுத்தும். ஆகவே மறத்தமிழர் சேனை சார்பில் மாநில அமைப்பாளர் புதுமலர்
பிரபாகரன் அவர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு கடும் எதிர்ப்பை
வாக்குமூலமாகவும், எழுத்து
பூர்வமாகவும் பதிவு செய்தார்கள்.
Friday, July 4, 2014
கள்ளர்- முக்குலத்தோர் (தேவர்)-பல்லவர்
கள்ளர்
தமிழகத்திலே தஞ்சை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் ஓர் பெருங் குழுவினரைக் கள்ளர் என வழங்கப்படுகிறது. இப்பொழுது இக்குழுவினரில் நீதி மன்றங்கள் பலவும் அமைத்துத் தமது நாட்டினை ஆட்சிபுரிந்து வருகின்ற ஓர் மன்னரும், குறுநில மன்னராய் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர்.

ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி
வீரமும் மானமும் விஞ்சியவர் தமிழ் மறவர். இவர்களது தொன்மையையும், வாழ்க்கைச் சிறப்பையும் சங்க இலக்கியங்களான அகநானுhறு , புறநானுhறு, நற்றினை, பெரும்பாணாற்றுப்படை ஆகியவை ஏற்றிப் போற்றுகின்றன. விழுடககொடை மறவர், பினைகழல் மறவர், பெருந்தொடை மறவர் என்பன அந்த இலக்கியங்கள்மறவர்களுக்குச் சூட்டியுள்ள புகழாரங்கள்.
எதிரி எமனாக இருந்தாலும் அவனை அழித்து ஒழிப்பவர் மறவர் என, பகை என கூற்றம் வரினும் தொலையான் என்பது மறவர்களுக்குக் கூலித் தொகை கூறும் கட்டியமகும். பத்தாம் நுhற்றாண்டில் சோழர்கள் பெரும் நிலை எய்துவதற்கும், பதின்மூன்றாம் நுhற்றாண்டில் பிற்காலப் பேரரசர்களாகப் பாண்டியர் பெருமிதம் கொள்வதற்கும் அரசப்படையாக நின்று உதவியவர்கள் இந்த மறவர்கள். இவர்கள் மிகுதியாகவும் தொகுதியாகவும் வாழ்ந்த நாடு (இன்றைய இராமநாதபுரம், சிவகங்கைச் சீமைகள்) மறவர் சீமை என வாலாற்றில் குறிக்கப்படுகிறது.
இவர்களது மூத்தகுடிமகனான மறவர் சீமை மன்னர், " புனித சேது காவலன்" என வழங்கப்பட்டார். கி.பி. பதினைந்தாம் நுhற்றாண்டு முதல் தமிழ்மொழிக்கும், ஆன்மீக வளர்ச்சிக்கும் அவர்கள் அளித்துள்ள மகத்தான பங்கு காலத்தால் மறைக்க முடியாதது. அவர்களது வீரம், கொடை, புலமை ஆகியவற்றைப் போற்றும்

ஸ்ரீமான் பாஸ்கர சேதுபதி
எழுதியவர்:உ.வே.சாமிநாதய்யர்
இராமநாதபுரம் அரசராக இருந்து புகழ்பெற்ற ஸ்ரீமான் பாஸ்கர சேதுபதியவர்களை அறியாத தமிழர் இரார்; சற்றேறக்குறைய 40 வருஷங்களுக்கு முன்பு ஒரு முறை அவர் திருவிடைமருதூருக்கு வந்து ஒரு மாதம் அத்தலத்தில் தங்கியிருந்தார். அக்காலத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தில் தலைவராக விளங்கிய ஸ்ரீ அம்பலவாண தேசிகர் திருவிடைமருதூரிலேயே இருந்து வந்தனர். இராமநாதபுர ஸமஸ்தானத்திலிருந்து திருவாவடுதுறையாதீனத்திற்கு மகமைகளும் வேறு வரும்படிகளும் உண்டு. ஆதலின் இரண்டு இடங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அம்பலவாண தேசிகர் அரசரையும் அவருடைய பரிவாரங்களையும் மிகவும் செவ்வையாக உபசரித்து வந்தார். அவருடைய உபசாரங்களிலும் ஸ்ரீ மகாலிங்கமூர்த்தியின் தரிசனத்திலும் சேதுபதி மன்னர் ஈடுபட்டு மகிழ்ந்தனர். அச்சமயம் ஒவ்வோரு நாளும் ஒரு திருவிழாவாக இருந்தது.

வரலாறு - சாதிகளின் வரலாறு
| வரலாறு - சாதிகளின் வரலாறு |
கள்ளர் எனப்படுவோர் தமிழகத்திலே தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் ஓர் பெருங் குழுவினரைக் குறிக்கும். இப்பொழுது இக்குழுவினரில் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர்.
முக்குலத்தோர் (தேவர்)
முக்குலத்தோர் என்றும் இச்சாதியினரைக் குறிப்பிடுவதுண்டு. கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்திர(சூரிய) குலத்தினர் - கள்ளர், சந்திர குலத்தினர் - மறவர், அக்னி குலத்தினர் - அகமுடையார் என்பதை வரலாற்றின் மூலம் அறிய பெறலாம். இந்த மூன்று குலத்தினரும் தேவர் என்ற பொதுவான பெயரோடு குறிக்கப்பெறுவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய மூவரும் சகோதரர்களே என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர்.
|
Monday, February 24, 2014
பாரத் சேனா கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
பாரத் சேனா கட்சியின் கோவை மாநகர மாவட்டத்தின் சார்பில்
23.02.14, அன்று மாலை 6.00 மணியளவில் கோவை செல்வபுரம் சிவாலயா தியேட்டர்
அருகில் ‘மாபெரும் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம்’ நடைபெற்றது.
பொதுக்கூட்டத்திற்கு பாரத்சேனா மாவட்ட இளைஞர் அணிச்
செயலாளர் கோவை எஸ்.ஆர்.ஜெகதீஸ் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள்
டவுன்ஹால் பிரேம்ஜீ அவர்களும் பி.ஜெ.குமார் அவர்களும் முன்னிலை வகித்தனர்.
பாரத்சேனா மாநில பொதுச்செயலாளர் செந்தில்கண்ணன் அவர்களும்,
மாநில அமைப்பு செயலாளர் உங்கள் சிவா அவர்களும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
Subscribe to:
Posts (Atom)