★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Monday, February 24, 2014

பாரத் சேனா கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

பாரத் சேனா கட்சியின் கோவை மாநகர மாவட்டத்தின் சார்பில் 23.02.14, அன்று மாலை 6.00 மணியளவில் கோவை செல்வபுரம் சிவாலயா தியேட்டர் அருகில் மாபெரும் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்திற்கு பாரத்சேனா மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் கோவை எஸ்.ஆர்.ஜெகதீஸ் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் டவுன்ஹால் பிரேம்ஜீ அவர்களும் பி.ஜெ.குமார் அவர்களும் முன்னிலை வகித்தனர். பாரத்சேனா மாநில பொதுச்செயலாளர் செந்தில்கண்ணன் அவர்களும், மாநில அமைப்பு செயலாளர் உங்கள் சிவா அவர்களும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

விழாவில், கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர் சுவாமிகள் கலந்து கொண்டு அருளாசி வழங்கினார். மேலும், கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை மாநிலதலைவர் பொங்கலூர் இரா.மணிகண்டன் அவர்களும், தமிழ்நாடு இந்துமஹா சபை மாநிலத்தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ அவர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.


மறத்தமிழர் சேனை சார்பில் தலைவர் புதுமலர் பிரபாகரன் அவர்களும், மாநில தொண்டர்சேனை செயலாளர் பசும்பொன் முத்துக்குமார் அவர்களும், மறத்தமிழர் சேனை கோவை மாவட்ட செயலாளர் தங்கவேல் அவர்களும் கலந்து கொண்டனர்.

புதுமலர் பிரபாகரன் அவர்கள் பேசும்போது “தெற்கு சீமைக்கும் கொங்கு மண்டலத்திற்கும் பசும்பொன் தேவர் காலம்முதல் பிரிக்கமுடியாத அளவிற்கு ஓர் பந்தம் உண்டு. இன்றைய சூழலில் நாம் தனித்தனியானவர்களாக பிரிந்துகிடப்பதால் தான் நமது வாக்குகள் தவறான திசையில் மடைமாற்றப் படுகிறது. நாங்கள் தேவர்களாகவும் நீங்கள் கவுண்டர்களாகவும் இருக்கின்ற பட்சத்தில் நம்மிருவரையும் ஒன்றிணைக்கும் பலமான சக்தியாக இந்து மதம் திகழ்கிறது. வலிமையான கூட்டமைப்பு நம்மிடையே உருவாக்கப்பட்டால் தான் இரண்டு பகுதி மக்களிலிருந்து ஒருவர் முதல்வராக உயர முடியும்.


கோவை பகுதியின் மொத்த வர்த்தகமும் இன்று மலையாளிகள் வசமாகிக் கொண்டிருக்கிறது. நமது பண்பாட்டு அடையாள விழாக்களெல்லாம் மறக்கடிக்கப்பட்டு ஓணமும், வெண் சேலையும் தமிழர்கள் மத்தியில் பரப்பப்படுகிறது. இந்த நிலையிலிருந்து நாம் விடுபட வேண்டுமெனில் நமக்குள் குறைந்தபட்ச செயல்திட்டத்துடன் கூடிய ஓர் கூட்டமைப்பு நிச்சயம் உருவாக்கப்பட வேண்டும். நாம் தெய்வமாக வணங்கக்கூடிய, பெற்ற தாய்க்கு அடுத்தநிலையில் இருக்கக்கூடிய பசு மலையாளிகள் கொன்று தின்பதற்காக இந்த பகுதியின் வழியாகவே கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. தடுத்துநிறுத்த வேண்டிய காவல்துறையும், தட்டிக்கேட்க வேண்டிய தமிழக அரசும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் சூழலில் இதனை செயல்படுத்த வேண்டிய நிர்பந்தம் இந்தப்பகுதியிலே இருக்கக்கூடிய இந்து அமைப்புகளுக்கும், குறிப்பாக பாரத்சேனாவிற்கு உண்டாகிறது.


பொது சிவில்சட்டம் என்பதும் வெறுங்கனவாக இருக்கிறது. இனி அமையப்போகும் ஆட்சியிடம் அது குறித்த கருத்தியலை ஏற்படுத்திட கடுமையான போராட்டங்களை நீங்கள் முன்னெடுக்க வேண்டும். பொதுநலன் சார்ந்து, இந்துமத மேன்மைக்காக பாரத் சேனா எடுக்கும் அத்தனை போராட்டங்களுக்கும் நாங்கள் ஆதரவுக்கரம் நீட்ட தயாராக இருக்கிறோம்.” என்று தமது உரையை நிகழ்த்தினார்.