திருநெல்வேலி : சங்கரன்கோவில் தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. சங்கரன்கோவிலை அடுத்த புளியம்பட்டியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கருப்பசாமியின் மறைவை அடுத்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் எஸ். முத்துச்செல்வி போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முத்துச்செல்வி சங்கரன்கோவில் நகராட்சி தலைவியாக உள்ளார். இவர் முன்னாள் எம்.எல்.ஏ., சங்கரலிங்கத்தின் மகள் ஆவார்.Wednesday, January 18, 2012
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் - புறக்கணிப்போம்
திருநெல்வேலி : சங்கரன்கோவில் தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. சங்கரன்கோவிலை அடுத்த புளியம்பட்டியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கருப்பசாமியின் மறைவை அடுத்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் எஸ். முத்துச்செல்வி போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முத்துச்செல்வி சங்கரன்கோவில் நகராட்சி தலைவியாக உள்ளார். இவர் முன்னாள் எம்.எல்.ஏ., சங்கரலிங்கத்தின் மகள் ஆவார்.Sunday, January 15, 2012
Wednesday, January 4, 2012
விடுதலைப் புலிகள் இலச்சினையுடன் அஞ்சல் தலை
விடுதலைப் புலிகளை இயக்கத்தை ஆதரிக்கும் ஒரு அமைப்பு இந்த அஞ்சல் தலைகளை வெளியிடுவதற்கு பிரான்ஸ் அரசாங்கம் அனுமதித்திருப்பது வரவேற்க்கதக்கது. இதன் மூலம் உலகநாடுகள் நமது உரிமைப்போரை அங்கீகரித்ததாக மறத்தமிழர் சேனை கருதுகிறது.
இதனிடையே, விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய படங்கள், இலச்சினைகளுடன் அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது குறித்து கொழும்பில் உள்ள பிரான்ஸ் தூதர் கிறிஸ்டின் ரொபிசொனை நேற்று சந்தித்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அஞ்சல் தலைகளை புழக்கத்தில் இருந்து உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

பெரியாறு அணை - நிபுணர் குழு அறிக்கை - maraththami zhar senai
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை குறித்து சுப்ரீம் கோர்ட்டுக்கு ஆலோசனை சொல்ல சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு நியமித்துள்ளது. நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழுவினர் டெல்லியில் நேற்று முன்தினம் கூடி ஆலோசனை நடத்தினார்கள். அப்போது, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும். முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வுகளால் அணைக்கு பாதிப்பு ஏற்பட்டதா? என்று ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட சி.டி. தத்தே, டி.கே. மேத்தா குழுவின் அறிக்கையை ஏற்கக்கூடாது என்று கேரள அரசு வாதிட்டது.Wednesday, December 28, 2011
மக்களவையில் குரல் ஓட்டெடுப்பு மூலம் லோக்பால் மசோதா நிறைவேறியது
மக்களவையில் நாள் முழுவதும் நடந்த சூடான விவாதத்துக்கு பின், நள்ளிரவில் கடும் கூச்சல் குழப்பத்துக்கும், எதிர்க்கட்சிகள் வெளிநடப்புக்கும் இடையே குரல் ஓட்டெடுப்பு மூலம் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஊழலை ஒழிக்க லோக்பால் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தொடர் போராட்டம் நடத்தினார். இதன்விளைவாக, லோக்பால் மசோதாவை மத்திய அரசு தயாரித்தது. இதை ஏற்றுக்கொள்ள மறுத்த அன்னா குழுவினர் ஜன் லோக்பால் பெயரில் தனி மசோதாவை தயாரித்தனர்.
Tuesday, December 27, 2011
பிரதமர் மன்மோகன் சிங் - நரசிம்மராவின் வாரிசு
தமிழகத்தில் இரண்டு நாட்கள் தங்கியிருந்த பிரதமர் மன்மோகன் சிங், முல்லைப் பெரியாறு, கூடங்குளம் உள்ளிட்ட பிரச்னைகளில் வாயே திறக்காமல், நரசிம்மராவின் வாரிசு, தான் தான் என்பதை மீண்டும் நிரூபித்தார். தமிழகத்தை அலைக்கழிக்கும் இந்த முக்கிய பிரச்னைகளுக்கு பிரதமர் வருகையால் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தை சுடுகாடாய் மாற்ற கூடிய கூடங்குளம் அணுமின் நிலையம் மூடப்படுமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக நிற்கிறது. அணு உலையைத் திறக்க விடாமல் நான்கு மாதத்துக்கும் மேலாகத் தொடரும் உண்ணாவிரதத்துக்கு இன்றுவரை பதில் இல்லை.Sunday, December 25, 2011
கூடங்குளமும் வேண்டாம் என்றால் மின் தட்டுப்பாட்டை எப்படித் தான் தீர்ப்பது?
இத்தனை நாட்கள் கழித்து இப்போது கூடங்குளத்தில் போராட வேண்டிய தேவை என்ன?
இதற்கு நேரடியாக விடை சொல்வதை விடக் கூடங்குளத்தில் பட்டினிப்போராட்டத்தில் பங்கேற்ற கவிஞர் மாலதி மைத்ரியின் விடையைச் சொல்கிறேன். ‘உங்கள் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து, திருமணம் பண்ண முடிவு செய்துவிட்டீர்கள். திருமண நாள் குறித்தாகிவிட்டது; மண்டபத்திற்குப் பணம் கொடுத்தாகிவிட்டது; சொந்தக்காரர்கள் எல்லாருக்கும் அழைப்பிதழும் அனுப்பிவிட்டீர்கள். நாளை காலை திருமணம். இன்று இரவு தான் உங்களுக்கு அதிர்ச்சியான ஒரு செய்தி தெரிய வருகிறது – நீங்கள் பார்த்திருக்கும் மாப்பிள்ளைக்கு எயிட்சு நோய் இருக்கிறது என்று! இப்போது சொல்லுங்கள்! பல்லாயிரக்கணக்கான உரூபா செலவு பண்ணிட்டோம், திருமணம் நடக்கட்டும்னு விடுவீங்களா? இல்லை நிறுத்தி விடுவீர்களா?

Subscribe to:
Posts (Atom)