★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Thursday, August 3, 2017

எது அரசியல் ?


ரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒவ்வொரு நிகழ்வும் அது நிகழும் காலத்தில் இயல்பாக நடந்தது போலத்தான் தோன்றும். ஆனால், அது இயல்பானதல்ல. ஒவ்வொரு நிகழ்வும் ஒன்றோடொன்று தொடர்பாக எதையோ நோக்கி நகர்ந்து கொண்டுதானிருக்கும். அதுபோலவே,  உலகமெங்கும் கடல் பரந்து விரிந்து கிடக்கிறது என்றாலும், எங்கள் சேது நாட்டு கடலுக்கென்று தனிச்சிறப்பு உண்டு. கிடைப்பதற்கு அரிதான முத்து எங்கள் சேதுசீமையின் கடல்பரப்பில் கொட்டிக்கிடக்கிறது. அதைப்போல, உலகமெங்கும் இராமனை கடவுளாக வணங்கி வந்தாலும், அந்த இராமனே வணங்கிய லிங்கமாகிய இராமலிங்கம் எங்கள் நாட்டின் புண்ணியபூமியான இராமேஸ்வரத்தில் அமைந்திருக்கிறது.  கிடைப்பதற்கரிதான முத்தும் இராமனே வணங்கிய இராமலிங்கமும் இணைந்து முத்துராமலிங்கம் ஆக தேவர் குலத்திலே ஓர் மகனாக பிறப்பெடுக்க வைத்திருக்கிறது.

பசும்பொன் கிராமத்தில் பாண்டியர் மரபிலே மாசற்ற தங்கமென உதித்த துருவநட்சத்திரம் தான் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார். தேவர் திருமகனார் அவர்களுடைய வாழ்வியல் முறையென்பது முற்றிலும் அறம் சார்ந்தது. ஆட்சியாளர்களின் அதிகார பலமோ, அதையும் மீறிய பணமோ ஒருபோதும் தேவரை சமரசம் கொண்டுவிடச்செய்ய இயலாத வகையில் யாவற்றிலும் முக்தி பெற்றவராயிருந்தார்.

எந்த நிலையிலும் முறைதவறி விடாமல், ஏழை எளிய மக்களின் வாழக்கைத்தரம் உயர்வதற்கென தமது அரசியலை கட்டமைத்துக் கொண்டார். அதன் காரணமாகவே இன்றளவும் அரசியல்வாதிகள் அனைவரும் தங்களது பேச்சுகளில் தேவரின் வாழ்வை; வாக்கை மேற்கோள்களாக காட்டி வருகிறார்கள்.

மறத்தமிழர் சேனை

மறத்தமிழர் சேனை
12/338, திருவரங்கம் சாலை,
நேதாஜி நகர், பரமக்குடி 

maraththamizhar senai

maraththamizhar senai - மறத்தமிழர் சேனை
12/338, thiruvarangam salai,
nethaji nagar, paramakudi.

Friday, January 6, 2017

தூரி எம்.ஆர். இராமசாமித் தேவர் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க கோரி மீண்டும் கடிதம்

மறைந்த மாபெரும் தியாகியும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் உற்ற நண்பருமாகிய முதுகுளத்தூர் தூரி கிராமத்தைச் சார்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் எம்.ஆர்.இராமசாமித்தேவர் அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்திடவும், அவரது பிறந்த நாளில் அரசு விழா எடுத்திடவும் வலியுறுத்தி தமிழக முதலைச்சரின் தனிப்பிரிவில் மறத்தமிழர் சேனை சார்பாக மனு அளிக்கப்பட்டிருந்தது. அந்த மனு குறித்து பரிசீலிக்கும்படி இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்திடம் முதல்வர் அலுவலகம் கோரியிருந்த நிலையில், இராமநாதபுரம், (ஊராட்சிகள்) உதவி இயக்குநர் திரு ஆ.செல்லத்துரை அவர்கள் 28.12.16 அன்று மாநில அமைப்பாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதனை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி, மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் இன்று (06.01.2017) இராமநாதபுரம் ஆட்சித்தலைவர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் “இந்திய நாடு ஆங்கிலேயர்களின் மேலாதிக்கத்திற்கு கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த பொழுது சுதந்திர உணர்வோடு போராடி – விடுதலை அடைந்திட பல போராட்டங்களையும், உயிர்த் தியாகங்களையும் அதிகஅளவில் நடத்தியதோடு, சிறை வாழ்வையும் முழு மனதோடு ஏற்றுக் கொண்டவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். அந்தவகையில் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், மு.தூரி கிராமத்தைச் சார்ந்த எம்.ஆர்.இராமசாமித்தேவர் அவர்கள் இந்திய சுதந்திர உணர்வோடு பலமுறை ஆங்கிலேயர்களுக்கு எதிராக செயல்பட்டு சிறை சென்று இருந்துள்ளார்.

Friday, December 30, 2016

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு மறத்தமிழர் சேனை கடிதம்

அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திருமதி ந.சசிகலா அவர்களுக்கு மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் சு.புதுமலர் பிரபாகரன் அவர்கள் இன்று (30-12-2016) கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் தமிழக அரசியல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தருணம் இது. மக்களாட்சி மலர்ந்துவிட்டதாக சொல்லப்பட்ட இத்தனை ஆண்டு காலங்களில் தமிழர்களின் நலன் சார்ந்து இயங்க வேண்டிய அனைத்து தமிழக அரசியல் கட்சிகளின் தலைமைகளும் தமிழர் அல்லாதோர் தலைமைகளில் தான் இருந்திருக்கிறது. முதல்முறையாக நேரடித் தமிழ்ச்சாதியை சார்ந்த தங்களது கைகளில் அதிகவாக்கு செல்வாக்குள்ள; சட்டமன்ற; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய அரசியல் கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பு, அனைத்து அதிமுக தொண்டர்களின் ஒட்டுமொத்த ஆதரவோடு வந்திருப்பது வரவேற்கத்தகுந்த நிகழ்வாகும்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் தமிழகத்தை அரசாட்சி செய்த காமராஜர் அவர்களின் 1954 – 1963 ஆண்டு வரையிலான ஒன்பது ஆண்டுகால தமிழர் ஆட்சியும்கூட இந்திய தலைவர்களின் மேலாதிக்கத்தின் கீழ் தான் நடந்துள்ளது. ஆனால், தற்போது தங்களது மேலான வழிகாட்டுதலின் கீழ் செயல்படவிருக்கும் ஆட்சியானது அனைத்து தமிழ்ச்சாதியினர்களும் தமிழ்த் தேசிய அமைப்பினர்களும் விரும்பிய வகையில் அமைந்திருப்பது எங்களைப் போன்றவர்களுக்கு மிகுந்த மன நிறைவை தருவதாக; எழுச்சி அளிப்பதாக அமைந்திருக்கிறது.

Thursday, December 15, 2016

உறுப்பினர்கள் தகுதி இழப்பு : தலைமை முடிவு

மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் (15.12.2016) இன்று வெளியிட்டுள்ள அறிக்கை
                                                        
“மறத்தமிழர் சேனை இயக்கத்தின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றி, பல்வேறு வகையான தொடர்  சிக்கல்களுக்கு, சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலும், கடந்த எட்டு ஆண்டு காலத்தில் இயக்க நலன் சார்ந்து கொள்கை மாறாமல் பயணிக்கும் அடிப்படை உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்கள்.

தங்களின் மேலான அர்ப்பணிப்பு உணர்வு, தியாக மனப்பாண்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கலப்பு மண எதிர்ப்பு – சுய சாதி காப்பு – முக்குலத்தோருக்கான அதிகார மீட்டல் – மேலாதிக்க சுரண்டல் அழிப்பு – தனித்தொகுதி மாற்றல் – வரலாற்று மீட்பு – தியாகிகள் நினைவு போற்றல் – தமிழ்த் தேசிய அரசியல் பார்வை – தனித்தமிழ் வளர்ப்பு – போதையற்ற தமிழர் நிலம் என தொடர்ந்து  மறத்தமிழர் சேனை தனக்கென தனித்த அடையாளங்களோடு செயல்பட்டு வருகிறது. இத்தனைகளையும் சாத்தியமாக்கிய உங்கள் அனைவருக்கும் இயக்கம் என்றென்றும் கடமைப்பட்டது ஆகிறது.

ஆயினும், இயக்கத்தின் கட்டாய நெறிமுறைகளில் ஒன்றானது, உறுப்பினர்கள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தங்களது உறுப்பினர் நிலையை புதுப்பித்துக் கொண்டு புதிய அடையாள அட்டை பெற்றுவிட வேண்டும் என்பது ஆகும். அந்த வகையில், கடந்த 2009 – 2010 – 2012 – 2015 – நவ 2016 ஆகிய வருடங்களை முடிவு கால அளவாகக் கொண்டு, தற்போது வரை புதுப்பித்துக் கொள்ளாமல் நீடித்து வரும் அனைத்து உறுப்பினர்களையும் இன்று முதல் தற்காலிக தகுதி நீக்கம் செய்து அறிவிக்கிறேன்.

உறுப்பினர்கள் / நிர்வாகிகள் தங்களது உறுப்பினர் நிலையை ஜனவரி -15 க்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் தகுதி நீக்கம் நிரந்தரமாக்கப்படும் என்பதையும், அந்தந்த இடங்களுக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதையும் இதன் மூலம் அறிவுறுத்துகிறேன். கள ஆய்வு / விமர்சனக் குழுவின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த முடிவுகள் எடுக்கப்படுகின்றன. மேலும், புதிய உறுப்பினர்கள் அனைவரையும் தொகுத்து வெளியீடாக வைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.” என வெளியிட்டுள்ளார். 

Monday, November 28, 2016

குற்றப்பரம்பரை அரசியல் - பெருங்காமநல்லூர் வீரம்

பிரித்தானியக் காலனித்துவ ஆட்சி இந்தியாவில் வலுவாக வேரூன்றிய பிறகு, கி.பி. 1800களில் சென்னை மாகாணம் உருவாக்கப்பட்டது. மாகாணத்தை உருவாக்கியதுமே, காலனிய அரசு, கிழக்கிந்தியக் கம்பெனி மற்றும் அரசின் நிதி நிலையை உயர்த்திட ரெவின்யூ போர்டு (Board of Revenue), டிரேட் போர்டு (Board of Trade & வணிகம்) ஆகியவற்றை நிறுவித் தங்களது நலன்களைப் பெருக்குவதில் தனிக்கவனம் செலுத்தியது. இதே நேரத்தில் உதயமான இந்தியத் தேசியக் காங்கிரஸ்’ (1885) கட்சியின் செயல்பாட்டினால் கலக்கமுற்ற காலனிய அரசு, தன்னுடைய அதிகாரத்தை மேலும் பலப்படுத்த எத்தனித்தது.- குறிப்பாக, ‘சூரத் மாநாட்டில் (1907) காங்கிரசாரிடையே ஏற்பட்ட மிதவாத & தீவிரவாதப் பிளவின் காரணமாக உருவான திலகரின், தலைமையிலான தீவிரவாத அமைப்பினரின் செயல்பாட்டினை எதிர் கொள்ள முடியாது அது திணறியது.

இத் தீவிரவாத அமைப்பை ஒடுக்கி அடக்குவதற்காகச் சட்டவிடிவிலான பல்வேறு சதிகளைப் பிரிட்டிஷ் அரசு தீட்டியது. இதன் மறு பகுதியாக, இங்குப் பரம்பரையாக உடல் வலிமை கொண்டு செல்வாக்குச் செலுத்திவந்த சில தீரமான உள்நாட்டுக் குழுக்களையும் எதிர் கொள்ளும் வகையில் & அவர்களையும் தம் ஆட்சிக்குக்கீழ் கொண்டு வந்து அடிமைப்படுத்தும் நோக்கில் & பல குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் காலனிய அரசு குற்றவியல் பரம்பரைச் சட்டம் & 1871’ (Criminal Tribes Act 1871) போன்ற சட்டங்கள், மேலும், உள்ளூர் பிரஜைகள் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்வதைத் தடுத்து நிறுத்தவும், முஸ்லீம்களைக் காங்கிரசிலிருந்து தனிமைப்படுத்தவும் பல்வேறு தந்திரோபாயங்களை மேற் கொண்டது. (தமிழகத்தில், பிறமலைக் கள்ளர்கள் காங்கிரசில் சேருவதைப் பெரும்பாலும் தடுத்து நிறுத்தியதற்காகக் கள்ளர் சமூக அபிவிருத்திஅதிகாரியாகப் பணி புரிந்த கி.ரி. இராஜா அய்யருக்கு வெள்ளைய அரசு ராவ்பகதூர்பட்டம் வழங்கியது. முஸ்லீம்களுக்குச் சலுகைகள்அளித்துக் காங்கிரசிலிருந்து பிரித்ததை, ‘மிண்டோ மார்லிசீர்திருத்தம் அம்பலப் படுத்தியது. இவற்றையும் இங்குக் கவனத்தில் கொள்ள வேண்டும்.)