★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Thursday, February 11, 2016

மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி சிலை திறக்கப்பட்டது


பெரிய மறவர் நாடு என வரலாறு போற்றும் இராமநாதபுரம் சீமையானது தனது வரலாற்றை செங்குருதியால் எழுதிக்கொண்டு, மரணத்திற்கு அஞ்சாத பல மாமறவர்களை தந்திருக்கிறது. அப்படிதான் 1760 ஆம் வருடம் மார்ச்-30 இல் பிறந்த முத்து விஜயராஜ முத்துராமலிங்க சேதுபதி தமது 12 வயதில் இராமநாதபுரம் மறவர் சீமையின் மன்னராக முடிசூட்டப்பட்டவர் ஆவார். ஆங்கிலேயர்கள், நவாபுகளின் கட்டற்ற வணிகத்தை முடக்க விற்பனை வரி, சுங்கவரி விதித்தவர், அந்நிய மேலாதிக்கத்தை கடுமையாக எதிர்த்ததன் விளைவாக 2-06-1772 இல் தனது தாயார், சகோதரியோடு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். பத்தாண்டுகள் சிறையிலேயே வாடிய மன்னரின் தாயார் சிறையிலேயே மரணமடைந்தார்.


மறவர் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பியதும் அஞ்சிய ஆங்கிலேயர்கள் 1782 இல் மன்னரை விடுதலை செய்தனர். மீண்டும் நல்லாட்சி செய்யத்துவங்கிய இவரது காலத்தில்தான் உலகப்புகழ் பெற்ற இராமேஸ்வரம் மூன்றாம் பிரகாரம் கட்டப்பட்டது. அதனைப்போலவே கடுகு சந்தை, தேவிபட்டினம், கோட்டைப்பட்டிணம் அன்னசத்திரங்கள் கட்டப்பட்டன. ஆயிரமாயிரம் பரப்பளவு கொண்ட நிலங்கள் முறையாக அளவிடப்பட்டன. மீண்டும் வலுவடையத் துவங்கிய மறவரது ஆட்சியை கண்டு அஞ்சிய ஆங்கிலேயர்கள் மன்னரைக் கைது செய்து திருச்சி சிறையிலும், பின்பு சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலும் சிறை வைத்த நிலையில் 1809 வருடம் ஜனவரி 23 ஆம் நாள் சென்னை சிறையிலேயே உயிர் துறந்த மாமன்னரை ரிபெல் என மக்கள் அழைக்கத் துவங்கினர்.

  இந்திய சுதந்திர போராட்ட வீரரும், இராமநாதபுரம் சீமையை அரசாண்ட மாமன்னரும், ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்து தொடர்ந்து 24 ஆண்டுகள் திருச்சி, சென்னை சிறைகளில் அடைக்கப்பட்டு சிறையிலேயே உயிர் நீத்தவருமான ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் புகழைப் போற்றும் விதமாக 1990 ஜனவரி 23 ஆம் நாள் தமிழக சட்டசபையில் 181 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், தமிழக அரசு அவரது பிறந்த நாளை அரசு விழாவாக தொடர்ந்து கொண்டாடி வருகிறது.

Monday, December 14, 2015

வேலுநாச்சியார் நினைவு நாள் - வீரமங்கையர் தினம் - மறத்தமிழர் சேனை கோரிக்கை.

மறத்தமிழர் சேனை இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காலை 10.00 மணியளவில் பரமக்குடியில் மாவட்ட செயலாளர் ம.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. பரமக்குடி ஒன்றிய செயலாளர் வ.முருகன் வரவேற்புரை ஆற்றிட மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சே.சேகர் முன்னிலை வகித்தார்.

மாநில தலைவர் புதுமலர் பிரபாகரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் எதிர்வரும் டிசம்பர்-25 அன்று சிவகங்கை ராணி வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 219 நினைவு நாளை சிவகங்கையில் சிறப்பாக கொண்டாடுவது எனவும், அவரது நினைவு நாளை வீரமங்கையர் தினமாக மத்திய அரசு அறிவித்திட தமிழக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், தமிழக அரசின்  சார்பில் வீரதீர செயல் புரியும் பெண்களுக்கு வேலுநாச்சியார் பெயரில் விருது வழங்கிடவும், ஏழ்மையில் வாடும் வேலுநாச்சியார் வம்சா வழியினருக்கு மாதாந்திர பென்ஷன் வழங்கிடவும் கோரிக்கை வைக்கப்பட்டது.


கூட்டத்தில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ம.முருகன், பரமக்குடி நகர் இளைஞர் அணி செயலாளர் மு.பிரபாகரன், பரமக்குடி ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் மா.பாலமுருகன், முத்தருள், கவியரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். பரமக்குடி நகர் செயலாளர் இ.மலைமேகம் நன்றியுரை ஆற்றினார்.

Monday, October 26, 2015

கர்நாடகாவில் பசும்பொன் தேவர் ஜெயந்தி விழா

சும்பொன் தேவர் திருமகனாரின் 108 வது ஜெயந்தி விழாவும், 53 வது குருபூஜை விழாவும் கர்நாடக தேவர் சங்கம் சார்பில் 25.10.2015 அன்று காலை 09.00 மணிமுதல் மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஜெயந்தி விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பெங்களூரு மாமன்ற உறுப்பினர் திருமதி பிரதீபா தன்ராஜ் அவர்களும், மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்களும், பெங்களூர் தமிழ்ச் சங்க தலைவர் கோ.தாமோதரன் அவர்களும் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர். 


கூட்டத்தில் கர்நாடக தேவர் சங்க தலைவர் போஸ் அவர்களும், முன்னாள் தலைவர் பாபு கே.தேவர் அவர்களும், முன்னாள் தலைவர் ஞானகுரு அவர்களும், கர்நாடக தேவர் சங்க செயலாளர் தமிழரசன் அவர்களும், ஒசூர் முக்குலத்தோர் சங்க செயலாளர் ராமசாமி அவர்களும், மறத்தமிழர் சேனை தொண்டரணி செயலாளர் மு.முத்துக்குமார பாண்டியன் அவர்களும் மற்றும் தேவர் சங்க நிர்வாகிகள், முன்னோடிகள் கலந்து கொண்டனர்.

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு இரத்த தான முகாம் நடைபெற்றது. சமூக சேவகர் குமார் ஜாகிர்தார் அவர்கள் முன்னிலை வகிக்க, முன்னாள் கல்விக்குழு தலைவர் பி.தன்ராஜ் அவர்கள் துவங்கி வைத்தார். பின்பு கண்கவர் கலைநிகழ்வுகள் மற்றும் பரத நாட்டிய நடனம் அரங்கேற்றம் நிகழ்த்தப்பட்டன.

மாலை மாமன்ற உறுப்பினர் பிரதீபா தன்ராஜ் அவர்களுக்கு பாராட்டு நிகழ்வும், விருந்தினர்கள் சிறப்புரையும் நடைபெற்றது. மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் தமது உரையில் “இன்றைய நாள் எமது வாழ்விலே மிக முக்கியமான நாளாக அமைந்து விட்டது. அதற்கு இரண்டு காரணங்கள் மட்டுமே இருக்கிறது. ஒன்று இன, மொழி உணர்வு மேலோங்கிய கருநாடக மக்களின் தலைநகராக விளங்கக்கூடிய பெங்களூர் மாநகரில் இனத்தைக் கூட்டி மிகப்பெரிய விழா எடுக்கும் உங்களை சந்திப்பது. இரண்டு ஒரு நகரம் எப்படி தொழில்துறையில் முன்னேறினாலும் இயற்கையை சிதைக்காமல் பசுமை போர்த்தியபடியே இருக்கக்கூடிய இந்த நகரை பார்ப்பது. அடுத்ததாக ஒன்றை சொல்லவேண்டும் என்றால் இந்திய அளவில் முறுக்கு தயாரிக்கும் தொழிலுக்குள் பிரமலைக்கள்ளர் சமூகம் திட்டமிட்டு எப்படி புகுந்தது என்பது குறித்து அறிகிற ஆவல்தான். அண்ணன் தமிழரசன் அவர்கள் அகில இந்திய முறுக்கு வியாபாரிகள் சங்கத்தின் செயலாளராக இருக்கிறார். அவரிடமும் கூட இதனை கேட்டிருக்கிறேன். குற்றப்பரம்பரைச் சட்டம் என்கிற கொடிய சட்டத்தால் நசுக்கப்பட்ட மக்கள் இன்று இந்திய அளவில் தொழில் ரீதியாக முன்னேறி வருவதும், உசிலம்பட்டி போன்ற பகுதிகளில் நினைத்த நேரத்தில் கோடி ரூபாயைக்கூட திரட்டி விடுகிற அளவிலே பொருளாதாரத்தில் உயர்ந்து நிற்பதும் வியப்புக்குரியது தான். அதுபோலவே, இந்த பெங்களூர் நகரத்தில் பல குடும்பங்கள் முப்பது நாற்பது ஆண்டுகளைக் கடந்து தொழில் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உயர்ந்து நிற்பது பெருமைக்குரிய செயல் ஆகும். சகோதரி பிரதீபா தன்ராஜ் அவர்கள் மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறித்து உறவுகள் சொன்ன போது எல்லையற்ற மகிழ்ச்சியை உணர்ந்தேன். அண்ணன் ஞானகுரு அவர்கள் பேசும் போது தெரிவித்தார், இவரைப் போலவே பலரும் முன்பு அரசியல் ரீதியான பதவிகளை அடைந்திருப்பதை. நல்ல துவக்கம் இது. என்னைப்போன்றவர்கள் தமிழக அரசியல் அரங்கில் கால் பதிக்க போராடி வரும் நிலையில் இங்கே அந்நிய மண்ணில் அதுவும் மொழிவெறி ஓங்கிய மண்ணில் நீங்கள் முத்திரை பதிப்பது வாழ்த்துக்குரியது. நாம் அரசியல் அதிகாரத்தை கைபற்றினால் மட்டுமே நாம் நினைத்ததை சாதிக்க முடியும் ஆகவே உறவினர்களே நீங்கள் எதைச் செய்தாலும் அரசியல் அதிகாரத்தை நோக்கியே செய்யுங்கள். அடுத்ததாக மொழி உணர்வை குழந்தைகளுக்கு ஊட்டி வளருங்கள். இந்த மாநிலத்தில் நீங்கள் மொழிச் சிறுபான்மையினர்களாக இருக்கலாம். இங்குள்ள மொழியையும், ஆங்கில மொழியையும் உங்கள் பிள்ளைகள் கற்பதற்கான வாய்ப்புகள் நிறைய இருந்துகொண்டே இருக்கலாம். ஆனாலும் தமிழையே கற்க செய்யுங்கள். இந்த கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரங்கம் பெங்களூர் தமிழ்ச் சங்க கட்டிடம் என்பது எவ்வளவு மகிழ்வை எனக்கு தருகிறது என்பதை வார்த்தைகளால் சொல்லிவிட இயலாது. ஏனென்றால் நாம் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த வள்ளல் பாண்டித்துரை தேவர் அவர்களின் வழிவந்தவர்கள். எனவே நாம் நமது இனத்தையும் மொழியையும் கட்டிக் காக்கும் விதத்திலேயே பிள்ளைகளை வளர்க்க வேண்டும். அதையே இந்த தேவர் ஜெயந்தி நாளில் உறுதியாக நீங்கள் ஏற்க வேண்டும் எனச் சொல்லி விடைபெறுகிறேன்” என தெரிவித்தார்.

Friday, September 25, 2015

ரிபெல் சிலை திறக்க மறத்தமிழர் சேனை வழக்கு

ந்திய சுதந்திர போராட்ட வீரரும், இராமநாதபுரம் சீமையை அரசாண்ட மாமன்னரும், ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்து தொடர்ந்து 24 ஆண்டுகள் திருச்சி, சென்னை சிறைகளில் அடைக்கப்பட்டு 1809 ஜனவரி 23 அன்று செயிண்ட் ஜார்ஜ் கோட்டை சிறையிலேயே உயிர் நீத்தவருமான ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் புகழைப் போற்றும் விதமாக தமிழக அரசு அவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடி வருகிறது. மேலும், கடந்த 21.12.2012 அன்று வெளியிட்ட அரசாணை (அ.எண்:683) மூலம் ரூ.4,51,620/- ஒதுக்கீடு செய்யப்பட்டு இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக புல எண்.320-ல் எட்டு அடி உயரமுள்ள வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

Tuesday, July 28, 2015

கேரளாவின் காய்கறி அரசியல்

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம் அதிகமாக இருப்பதாக கேரள அரசு குற்றம்சாட்டியுள்ளது. இந்த பொய் குற்றச்சாட்டினை தமிழக விவசாயிகள் கடுமையாக மறுத்துள்ளனர்  என்றாலும் கேரள அரசின் உணவு பாதுகாப்பு துறையிடம் அனுமதி சான்றிதழ் பெற்ற வாகனங்கள் மட்டுமே கேரளாவுக்குள் அனுமதிக்கப்படும் என்று கேரள அரசு கூறியுள்ளது.

Monday, July 27, 2015

குதிரைவாலி வெண்பொங்கல்

தேவையானவை: குதிரைவாலி அரிசி - ஒரு கோப்பை, பாசிப் பருப்பு - கால் கோப்பை, மிளகு - ஒரு தேக்கரண்டி, மஞ்சள்தூள் - 2 சிட்டிகை, நெய் - ஒரு மேசைக்கரண்டி, வறுத்த முந்திரிப் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி, கறிவேப்பிலை - 2 ஆர்க், நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: குதிரைவாலி, பாசிப்பருப்பு, மிளகு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, வழக்கமான பொங்கல் தயாரித்துக்கொள்ளுங்கள். நெய்யில் மிளகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, மேலே மிதக்கவிட வேண்டும். மேலே கொஞ்சம் வறுத்த முந்திரிப் பருப்புகளைத் தூவிச் சாப்பிடலாம். இதன் சுவை, மீண்டும் மீண்டும் குதிரைவாலியைத் தேட வைக்கும்.
பலன்கள்: சுவையிலும் மருத்துவத்தன்மையிலும் ஈடு இணையற்றது. புரதம், இரும்புச் சத்து, உயிர்ச் சத்துகளும் அதிகம். எல்லாவற்றையும்விட நார்ச் சத்து மிக அதிகம். தொற்றாநோய்க் கூட்டங்களான சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, புற்றுநோய், இதய நோய்களைத் தவிர்க்க மிக அவசியமானது நார்ச் சத்து. கரையும் நார்கள், இதய நாளங்களில் படியும் கொழுப்பைக் கரைக்கவும் சர்க்கரை திடீர் என ரத்தத்தில் உயராமல் இருக்கவும் பெருமளவு பயனாவதை உறுதிப்படுத்துகின்றன. ஆக, நார்ச் சத்து மிக முக்கியமான ஒரு சத்து. அளவில்லா நார்ச் சத்தைச் சுமந்து இருக்கும் வரகும் சாமையும் குதிரைவாலியும் அற்புதமான தானியங்கள்.

தினை அதிரசம்

தேவையானவை: தினை அரிசி - ஒரு குவளை, பனை வெல்லம் - இனிப்புக்கு ஏற்ப, ஏலக்காய்த் தூள் - ஒரு சிட்டிகை, எள் - ஒரு தேக்கரண்டி, நெய் - ஒரு மேசைக்கரண்டி, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: தினை அரிசியைக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவைத்து, பிறகு ஒரு வெள்ளைத் துணியில் உலர்த்தி பொடித்துக்கொள்ளவும். பனை வெல்லத்தை பாகு காய்ச்சவும். பிறகு தினை அரிசி மாவில் கொஞ்சம் எள், ஏலக்காய்த் தூளைப் போட்டு, அதில் இந்தப் பாகை ஊற்றி, மாவை மிருதுவாகப் பிசைந்துவைக்கவும். ஒரு நாள் விட்டு, மறுநாள் அதில் சிறிது நெய் விட்டு, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, இலையில் வைத்துத் தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். 'தினை அதிரசம்’ தயார்.
பலன்கள்: வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு; பெரியோருக்கும்தான். பூசிய உடல்வாகைக் கொண்டவர்கள், 'இனிப்பான’வர்கள் மருத்துவரிடம் இருந்து விலகி இருப்பதற்கான வழியும்கூட. அரிசி - வெல்ல அதிரசத்தைக் காட்டிலும், தினை அதிரசத்தில் சுவையும் அதிகம்; நலமும் ஏகம்.