★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Friday, September 25, 2015

ரிபெல் சிலை திறக்க மறத்தமிழர் சேனை வழக்கு

இந்திய சுதந்திர போராட்ட வீரரும், இராமநாதபுரம் சீமையை அரசாண்ட மாமன்னரும், ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்து தொடர்ந்து 24 ஆண்டுகள் திருச்சி, சென்னை சிறைகளில் அடைக்கப்பட்டு 1809 ஜனவரி 23 அன்று செயிண்ட் ஜார்ஜ் கோட்டை சிறையிலேயே உயிர் நீத்தவருமான ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் புகழைப் போற்றும் விதமாக தமிழக அரசு அவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடி வருகிறது. மேலும், கடந்த 21.12.2012 அன்று வெளியிட்ட அரசாணை (அ.எண்:683) மூலம் ரூ.4,51,620/- ஒதுக்கீடு செய்யப்பட்டு இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக புல எண்.320-ல் எட்டு அடி உயரமுள்ள வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

Tuesday, July 28, 2015

கேரளாவின் காய்கறி அரசியல்

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம் அதிகமாக இருப்பதாக கேரள அரசு குற்றம்சாட்டியுள்ளது. இந்த பொய் குற்றச்சாட்டினை தமிழக விவசாயிகள் கடுமையாக மறுத்துள்ளனர்  என்றாலும் கேரள அரசின் உணவு பாதுகாப்பு துறையிடம் அனுமதி சான்றிதழ் பெற்ற வாகனங்கள் மட்டுமே கேரளாவுக்குள் அனுமதிக்கப்படும் என்று கேரள அரசு கூறியுள்ளது.

Monday, July 27, 2015

குதிரைவாலி வெண்பொங்கல்

தேவையானவை: குதிரைவாலி அரிசி - ஒரு கோப்பை, பாசிப் பருப்பு - கால் கோப்பை, மிளகு - ஒரு தேக்கரண்டி, மஞ்சள்தூள் - 2 சிட்டிகை, நெய் - ஒரு மேசைக்கரண்டி, வறுத்த முந்திரிப் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி, கறிவேப்பிலை - 2 ஆர்க், நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: குதிரைவாலி, பாசிப்பருப்பு, மிளகு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, வழக்கமான பொங்கல் தயாரித்துக்கொள்ளுங்கள். நெய்யில் மிளகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, மேலே மிதக்கவிட வேண்டும். மேலே கொஞ்சம் வறுத்த முந்திரிப் பருப்புகளைத் தூவிச் சாப்பிடலாம். இதன் சுவை, மீண்டும் மீண்டும் குதிரைவாலியைத் தேட வைக்கும்.
பலன்கள்: சுவையிலும் மருத்துவத்தன்மையிலும் ஈடு இணையற்றது. புரதம், இரும்புச் சத்து, உயிர்ச் சத்துகளும் அதிகம். எல்லாவற்றையும்விட நார்ச் சத்து மிக அதிகம். தொற்றாநோய்க் கூட்டங்களான சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, புற்றுநோய், இதய நோய்களைத் தவிர்க்க மிக அவசியமானது நார்ச் சத்து. கரையும் நார்கள், இதய நாளங்களில் படியும் கொழுப்பைக் கரைக்கவும் சர்க்கரை திடீர் என ரத்தத்தில் உயராமல் இருக்கவும் பெருமளவு பயனாவதை உறுதிப்படுத்துகின்றன. ஆக, நார்ச் சத்து மிக முக்கியமான ஒரு சத்து. அளவில்லா நார்ச் சத்தைச் சுமந்து இருக்கும் வரகும் சாமையும் குதிரைவாலியும் அற்புதமான தானியங்கள்.

தினை அதிரசம்

தேவையானவை: தினை அரிசி - ஒரு குவளை, பனை வெல்லம் - இனிப்புக்கு ஏற்ப, ஏலக்காய்த் தூள் - ஒரு சிட்டிகை, எள் - ஒரு தேக்கரண்டி, நெய் - ஒரு மேசைக்கரண்டி, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: தினை அரிசியைக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவைத்து, பிறகு ஒரு வெள்ளைத் துணியில் உலர்த்தி பொடித்துக்கொள்ளவும். பனை வெல்லத்தை பாகு காய்ச்சவும். பிறகு தினை அரிசி மாவில் கொஞ்சம் எள், ஏலக்காய்த் தூளைப் போட்டு, அதில் இந்தப் பாகை ஊற்றி, மாவை மிருதுவாகப் பிசைந்துவைக்கவும். ஒரு நாள் விட்டு, மறுநாள் அதில் சிறிது நெய் விட்டு, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, இலையில் வைத்துத் தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். 'தினை அதிரசம்’ தயார்.
பலன்கள்: வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு; பெரியோருக்கும்தான். பூசிய உடல்வாகைக் கொண்டவர்கள், 'இனிப்பான’வர்கள் மருத்துவரிடம் இருந்து விலகி இருப்பதற்கான வழியும்கூட. அரிசி - வெல்ல அதிரசத்தைக் காட்டிலும், தினை அதிரசத்தில் சுவையும் அதிகம்; நலமும் ஏகம்.

Thursday, July 23, 2015

தமிழகத்தில் புரோட்டா, மைதா தடை வேண்டும்

தமிழர்களின் பாரம்பரிய உணவுகளுக்கெதிரான திட்டமிட்ட பிரச்சாரம், மேற்கத்திய கலாச்சார நுகர்வு, தொலைக்காட்சி விளம்பரங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆரோக்கியமான உணவு வகைகளாகிய கேழ்வரகு, குதிரைவாலி, கம்பு, சிறுதானியங்கள் ஆகியவற்றை நாகரிக்கத்தின் பெயரால் இழந்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ‘துரித உணவு’ பழக்கம் தொழுநோய் போல எல்லா வயதினர்களையும் தொற்றிக்கொண்டது.
குறிப்பாக, தென்தமிழகத்தில் பரவலாக கிடைக்கக்கூடிய கெடுஉணவு ‘பரோட்டா’ முற்றிலும் தடை செய்யப்பட வேண்டிய உணவாகும், விதவிதமான வடிவங்களில், சுவைகளில் செய்து தரப்படும் புரோட்டா மனித உடலுக்கு அபாயம் விளைவிக்கக்கூடிய மைதாவில் தயாராகிறது. சீனா, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற பல உலக நாடுகளில் மைதாவின் பயன்பாடு தடை செய்யப்பட்டிருக்கிறது. நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர். மேலும் மைதாவின்  தீமைகள் குறித்து  ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.

Sunday, June 14, 2015

மறத்தமிழர் சேனை 1,08,000 பார்வையாளர்களைக் கடந்துள்ளது, வணங்குகிறோம்.

பிறந்த பொழுதே இறந்து போவோமென அறிந்து வாழும் அடலேறுகளே ! வணக்கம்.

                       இந்த உலகத்திலே பிறந்த ஒவ்வொரு மனிதனும், தான் பிறந்து வளர்ந்ததற்கு அடையாளமாக எதையேனும் விட்டுவிட்டு செல்லவேண்டும். அப்பொழுதுதான் அவன் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கும். இல்லையென்றால் "கூற்றுக் கிரையெனப் பின்மாயும்- பல வேடிக்கை மனிதரைப் போலே" நாமும் வரலாறு அற்ற, மறந்துபோன இறந்து போனவர்களில் ஒருவராக ஆகித்தான் ஆவோம். இந்த எண்ணத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மறத்தமிழர் சேனை இணையதளம் தொடங்கப்பட்ட மிகக்குறுகிய நாட்களிலேயே 1,08,000  உறவுகளை தாண்டி வெற்றிநடை போடுகிறது. நாங்கள் இணையத்தில் மட்டும் இயங்கும் 'வாய்ச்சவடால்' அமைப்பு அல்ல. அதே சமயம் இணைய அரசியலிலும் எங்களால் சிறப்பாக இயங்கமுடியும் என்பதற்கான அத்தாட்சி இது. 

                     இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இதனை, இத்தனை எளிதில் சாத்தியமாக்கிய மறத்தமிழர் சேனை நிர்வாகிகளையும், எங்கள் மீது அளவிடமுடியாத பிரியங்கொண்ட உறவினர்களையும், எவ்வளவு சிறப்பான செயல்களையும் ஒருநொடியில் உதறிவிட்டு தொடர்ந்து விமர்சிக்கும் ஆலோசகர்களையும், நெடிய பயணத்தில் உடன்வருவதைப் போல் நடித்து எங்களை பலவீனப்படுத்த முயற்சிக்கும் சக இயக்கத்தார்களையும், எதிரியாகவே இருந்தாலும் என்னதான் எழுதுகிறார்கள் என்று தினந்தினம் எங்களை பார்வையிடும் மாற்று சமூகத்தார்களையும் பெருமையுடன் வணங்குகிறோம்.
   
                                              இது நம் சமூகத்திற்கான வெற்றி. 

Tuesday, June 2, 2015

மாமன்னர் முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர்

சிவகங்கை சீமையின் இரண்டாம் மாமன்னர் முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர் அவர்களின் நினைவேந்தல் விழா ஜூன்-25 அன்று காளையார்கோவில் மாலையீட்டில் நடைபெற உள்ளது.