★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Thursday, March 29, 2012

பெருங்காமநல்லூர் துப்பாக்கிசூடு வீரவணக்க நாள்

பெருங்காமநல்லூர் துப்பாக்கிசூடு வீரவணக்க நாள்  விழா

Wednesday, March 28, 2012

தென் இந்தியாவின் ஜாலியன்வாலாபாக் 1920 ஏப்ரல் 3


                          ரேகைச்சட்டம், குற்றப்பரம்பரைச் சட்டம், நெருக்கடிச்சட்டம் எனப்பல பெயர்களால் அழைக்கப்பட்ட "குற்றப்பழங்குடிகள் சட்டம் 1911"

                          அடிமை விலங்கொடிந்து அரை நூற்றாண்டுக்கு மேலாகியும் தழும்புகள் அழியாமல் தங்கிவிட்டன.எல்லோரையும் அடிமைப்படுத்தி வைத்திருத்த பிரிட்டிஷ்காரன், குறிப்பிட்ட சில இனங்களை பங்கப்படுத்தி அழிக்க  நினைத்தான்.அந்த பிரிவினரால் மட்டுமே வெள்ளையன் மீதான கோபத்தை இன்றும் விட்டொழிக்க இயலவில்லை.

Monday, March 26, 2012

கூடங்குளம் போராட்டத்தை கைவிட உதயகுமார் நிபந்தனை

கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டதையடுத்து கடந்த 7 மாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அணு உலை பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன.
 
இதனை எதிர்த்து கூடங்குளம் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் கடந்த ஒரு வார காலமாக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை இடிந்தகரையில் நடத்தி வருகிறார். போராட்டக்காரர்களால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கக் கூடாது என்பதற்காக ராதாபுரம் தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
 

தமிழக பட்ஜெட் : எண்ணெய் முதல் சரக்கு வரை விலை எகிறும்

சென்னை: தமிழக அரசின் 2012-13ம் ஆண்டுக்கான பட்ஜெட், சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் ரூ.1500 கோடிக்கு புதிய வரிகள்
விதிக்கப்பட்டுள்ளன. முதல்வர் தலைமையில் தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் அமைக்க சட்டம் கொண்டு வரப்படும் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். ஏழைகளுக்கு இந்த ஆண்டில் 1 லட்சம் வீட்டு மனை பட்டா, 60 ஆயிரம் பசுமை வீடுகள், குடிசைகளுக்கு  இலவச சிஎப்எல் பல்புகள் உள்பட புதிய திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.

Saturday, March 24, 2012

அரவான் - விமர்சனம்

பல்வேறு வரலாற்று ஆதாரங்களை வைத்து எழுதப்பட்ட நாவல் சு.வெங்கடேசனின் காவல் கோட்டம். அதின் சில சுவாரஸ்யமான பகுதிகளை திரைக்கதையாக அமைத்து அரவான் படத்தை உருவாக்கி இருக்கிறார் வசந்தபாலன். ’காவல் கோட்டம்’ சாகித்திய அகாதமி விருது பெற்ற நாவல் என்பது குறிப்பிடத்தக்கது. 


18ஆம் நூற்றாண்டில் நடக்கிற கதை என்ற சவாலை ஏற்ற வசந்தபாலன், கதாபாத்திரங்களின் உடை, சிகை, பேச்சு, உடல் அசைவுகள், கலை, ஒளிப்பதிவு என அனைத்திலும் அந்த காலகட்டதின் உணர்வை ஏற்படுத்துகிறார். இதுவே வசந்தபாலனின் வெற்றி என கருதலாம்.
 

Wednesday, March 21, 2012

வள்ளல் பொன்.பாண்டித்துரைத் தேவர் பிறந்த நாள் விழா

றத்தமிழர் சேனை கமுதி ஒன்றியத்தின் சார்பில்  நான்மாடக் கூடல் மதுரை மாநகரில், நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த  வள்ளல், பாலவநத்தம் மன்னர்  பொன்.பாண்டித்துரைத் தேவர் அவர்களின்  பிறந்த நாள் விழா கூட்டம் இராமநாதபுரம் மாவட்டம் கமுதி தேவர் மகாலில் 20-03-2012 செவ்வாய்கிழமை  அன்று மாலை 3 00  மணியளவில் மறத்தமிழர் சேனை  கமுதி ஒன்றிய செயலாளர் S.ராமசெல்வம் தலைமையில் நடைபெற்றது.


Thursday, March 15, 2012

ஜெனிவாவில் கிடைத்திருக்கும் வாய்ப்பை இந்தியா தவறவிடக்கூடாது

ஐ.நா. பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிப்பதன் மூலம் மட்டுமே இலங்கை விவகாரம் சரியான திசையில் நகர்வதை உறுதிப்படுத்துவதாக இருக்க முடியும். அதுவே உறுதியான நகர்வாக இருக்க முடியும்.

இந்தியாவில் வெளியாகும் "இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகையில் பொதுநலவாய மனித உரிமை அமைப்பின் பணிப்பாளரான மஜா டர்வாலா எழுதி வெளியிட்ட கட்டுரையின் தமிழாக்கம் இது.

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இந்தியாவானது தனது தலைமைத்துவத்தை மிகச் சரியாக, உறுதியாகப் பயன்படுத்துவதுடன், இலங்கை விவகாரம் தொடர்பில் உறுதியான தீர்வையும் நடவடிக்கைகளையும் எடுப்பதற்கான அழுத்தத்தையும் கொடுக்க வேண்டும்.