செம்பியன் மாதேவி
பெருமை வாய்ந்த சோழ வம்சத்தின் மருமகளான செம்பியன் மாதேவியாரும் தம் காலத்தில் ஏராளமான சிவன் கோயில்களைக் கட்டி திருப்பணிகள் செய்துள்ளார்கள். தில்லைச் சிற்றம்பலத்துக்குப் பொன் கூரை வேய்ந்த பராந்தகச் சோழனின் இரண்டாவது மகன் கண்டராதித்தன், முதல் மகனான ராஜாதித்தன் போரில் உயிர் துறந்தபின் கண்டராதித்த சோழன் கி.பி. 953ல் அரியணை ஏறினார். இவரின் மனைவியே மழவராயர் குடும்பத்தில் பிறந்த செம்பியன் மாதேவியார்.இவர்களுக்குப் பிறந்த மகனே மதுராந்தக உத்தமசோழன். கி.பி 957ல் கண்டராதித்த சோழன் மரணம் அடைந்தான். மகனை வளர்க்கும் பொருப்பு செம்பியன் மாதேவியாரைச் சேர்ந்தது. கணவர் இறந்த பிறகு சிவ வழிபாடு, ஆலயத்திருப்பணிகள், தர்ம காரியங்கள் என் வாழ் நாளை கழித்த செம்பியன் மாதேவியார் சுமார் 90 ஆண்டுகள் (கி.பி 910 - 1001) வாழ்ந்து ஆறு சோழமாமன்னர்களின் ஆட்சியைக் கண்டவர்.