★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Wednesday, June 20, 2018

மாமன்னர் முத்துவடுகநாததேவர் 246 வது வீரவணக்க நாள் விழா - சிவகங்கை மாவட்டம்


மாமன்னர் முத்துவடுகநாததேவர் 246 வது வீரவணக்க நாள் விழா - தேனி மாவட்டம்


மாமன்னர் முத்துவடுகநாததேவர் 246 வது வீரவணக்க நாள் விழா


சிவகங்கை சீமையின் இரண்டாவது மன்னர் சசிவர்ண முத்துவடுகநாதப் பெரிய உடையாத் தேவர் மற்றும் இளைய ராணி கெளரி நாச்சியார் ஆகியோரின் 246 வது நினைவு நாள் மற்றும் வீரவணக்க நாள் விழா ஜூன் - 25 - 2018 அன்று காளையார்கோவில் மன்னர் மாலையீட்டில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

மாமன்னர் சசிவர்ண முத்துவடுகநாதத் தேவரின் வீரத்தையும்; போர் திறனையும் புதிய தலைமுறையினர்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மறத்தமிழர் சேனை இயக்கம் களப்பணி ஆற்றி வருகிறது. குறிப்பாக, ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி, பொன்.பாண்டித்துரை தேவர், வேலு நாச்சியார், கீழத்தூவல் தியாகிகள் ஐவர், மன்னர் பாஸ்கர சேதுபதி, மாமன்னர் பூலித்தேவர் போன்ற மாபெரும் சமூக ஆளுமைகள் குறித்த விவாதங்களை கிளப்பி வெகுஜன கவனிப்பை ஏற்படுத்தியிருக்கிறோம்.

அதே சம முக்கியத்துவத்தோடு கடந்த சில வருடங்களாக திட்டமிட்டு உழைத்து வருகிறோம். சிவகங்கை சீமை அரசாண்ட மாமன்னர் சசிவர்ண முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர் அவர்கள் குறித்த விவாதத்தை கிளப்பும் நோக்கில் சுவர் விளம்பரங்கள் மறத்தமிழர் சேனை மதுரை மாவட்ட நிர்வாகிகளின் சிறந்த செயல்பாட்டால் நடைபெற்றது. தற்பொழுது 246 வது நினைவு நாளை முன்னிட்டு தேனி, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளால் சுவரொட்டிகள் அச்சடிக்கப்பட்டு ஒட்டப்பட்டு உள்ளன. அவற்றில் வெகுமக்கள் கவனம் ஈர்த்த சிலவற்றை காணலாம்.


Friday, April 13, 2018

வைகை நதி மக்கள் இயக்கம் கண்டன ஆர்ப்பாட்டம்


வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் வைகையாற்றில் கழிவு நீர் கலப்பதை கண்டித்தும், நிலத்தடி நீரை பாதுகாக்க வலியுறுத்தியும் 07.04.2018 அன்று மாலை 05.00 மணியளவில் மதுரை பேச்சியம்மன் படித்துரை ஆறுமுகசந்தி திலகர் திடல் சந்தை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வைகை நதி மக்கள் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எம்.ராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் சு.புதுமலர் பிரபாகரன், மாநில துணை பொதுச்செயலாளர் மு.முத்துக்குமார், மதுரை மாவட்ட தலைவர் சு.மணிகண்ட தேவர், மதுரை மாவட்ட ஆலோசகர் அ.கி.கணேசத்தேவர், மதசார்பற்ற ஜனதாதளம் மாநில பொதுச்செயலாளர் க.ஜான்மோசஸ், மக்கள் சட்ட உரிமை இயக்கம் தலைவர் ப.அண்ணாதுரை, நவீன நீர்வழிச்சாலை தலைவர் ஏ.சி.காமராஜ், வைகை டிரஸ்ட் நிறுவனர் அண்ணாதுரை, இந்து இளைஞர் சேனா மாநில தலைவர் எம்.சோலைக்கண்ணன், இந்து இளைஞர் சேனா மாநில அமைப்பாளர் கே.ரவிக்குமார், நம்மாழ்வார் சமூக சேவை அறக்கட்டளை நிறுவனர் கே.ஆர்.சித்தன், இயற்கை ஆர்வலர் வழக்கறிஞர் இ.த.சீமான் மற்றும் பல்வேறு இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

முன்னதாக மதுரை கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர் இல.அமுதன் வரவேற்புரை ஆற்றிட வைகை நதி மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் எம்.மணிகண்டன் நன்றியுரை ஆற்றினார்.

Thursday, April 12, 2018

mukkulathor logo

mukkulathor logo / moovendar logo / kallar / maravar / agamudayar / maruthu pandiyar / thevar

Saturday, March 31, 2018

ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி 258 வது பிறந்த நாள் விழா


இராமநாதபுரம் சீமை அரசாண்ட மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் 258 வது பிறந்த நாள் விழா அரசு விழாவாக ஆண்டுதோறும் மார்ச் -30 அன்று நடத்தப்பட்டு வருகிறது. ஆங்கிலேய ஆட்சியாளர்களின் அத்துமீறல்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மாமறவர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் பிறந்த நாளை மதுரை மாவட்ட மறத்தமிழர் சேனை வெகு விமரிசையாக கொண்டாடியது.

மதுரை மாவட்ட செயலாளர் து.தினேஷ் அவர்களின் தலைமையில் 30.03.2018 அன்று மதுரையில் நடைபெற்ற விழாவிற்கு மாநில துணை பொதுச்செயலாளர் மு.முத்துக்குமார் அவர்களும் மாநில துணை பொருளாளர் சுவ.அருணாச்சலம் அவர்களும் முன்னிலை வகித்தனர். மதுரை மாவட்ட தலைவர் சு.மணிகண்டத் தேவர் வரவேற்புரை ஆற்றிட மதுரை மாவட்ட பொருளாளர் பெ.திருப்பதி தேவர் இறுதியில் நன்றியுரை ஆற்றினார்.

மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் சு.புதுமலர் பிரபாகரன் அவர்கள் கலந்து கொண்டு மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மற்றும் மதுரை மாவட்ட இளைஞர் சேனை செயலாளர் கி.உலகநாதன், பழங்காநத்தம் பகுதி இளைஞர் சேனை செயலாளர் இரா.அருள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு மாமன்னரின் படத்திற்கு மரியாதை செலுத்தினார்கள்.

Friday, March 16, 2018

மேட்டுநீரேத்தான் தேவர் சிலை பிரச்சனை - வட்டாட்சியர் சந்திப்பு


மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், மேட்டு நீரேத்தான் கிராமத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு கிராம பொதுமக்கள் அனைவரும் இணைந்து தெய்வீகத்திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு தனியாருக்கு சொந்தமான பட்டா இடத்தில் ஆலயம் அமைத்தனர். திறந்த வெளியில் இல்லாமல் கோவிலாக கட்டிடத்தை எழுப்பி தேவர் திருமகனாருக்கு சிலை வைத்தனர்.

ஜெயலலிதாவிற்கும், எம்.ஜி.ஆர்க்கும் திடீர் திடீரென சிலை திறந்து வரும் தமிழக அரசு ‘தேவர் திருமகனாருக்கு சிலை திறப்பதை மட்டும் தடுக்கும்’ நோக்கத்தோடு இருப்பது போல, காவல்துறையின் மூலம் கோவில் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தியதோடு, சிலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வந்த மரியாதைக்குரிய சகோதரர் எம்.கே.கணேசன் அவர்களின் மீது சோழவந்தான் காவல் நிலைய குற்ற எண்.327/2016 இன் கீழ் வழக்கு பதிவு செய்தது. இதன் காரணமாக நீண்ட நாட்களாக தேவர் சிலை திறக்கப்படாமலும், கட்டிடப்பணிகளும் முழுமையாக நடைபெறாமல் இருந்து வந்தன.

மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் 19.01.2018 அன்று மேட்டுநீரேத்தான் கிராமத்திற்கு இயக்க நிர்வாகிகளோடு நேரில் சென்று சிலை அமைப்பு குழுவினர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து சிலை அமைக்கும் பணிக்கு அரசு தவறுதலாக ஏற்படுத்தி வரும் தடங்களுக்கு எதிராக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை விரைந்து பணியாற்ற உத்தரவிட்டிருந்தார். மறத்தமிழர் சேனை சார்பில் கட்டிட பணிகளை மீண்டும் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 15.03.2018 அன்று வாடிப்பட்டி வட்டாட்சியர் பார்த்திபன் அவர்கள் தலைமையில் சிலை அமைப்பது குறித்த பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்தில் மாநில துணைப் பொதுச்செயலாளர் மு.முத்துக்குமார், மதுரை மாவட்ட செயலாளர் து.தினேஷ், மதுரை மாவட்ட தலைவர் மணிகண்டன், மதுரை மாவட்ட பொருளாளர் பெ.திருப்பதி தேவர், மேட்டுநீரேத்தான் எம்.கே.கணேசத்தேவர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.