★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Friday, April 13, 2018

வைகை நதி மக்கள் இயக்கம் கண்டன ஆர்ப்பாட்டம்


வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் வைகையாற்றில் கழிவு நீர் கலப்பதை கண்டித்தும், நிலத்தடி நீரை பாதுகாக்க வலியுறுத்தியும் 07.04.2018 அன்று மாலை 05.00 மணியளவில் மதுரை பேச்சியம்மன் படித்துரை ஆறுமுகசந்தி திலகர் திடல் சந்தை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வைகை நதி மக்கள் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எம்.ராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் சு.புதுமலர் பிரபாகரன், மாநில துணை பொதுச்செயலாளர் மு.முத்துக்குமார், மதுரை மாவட்ட தலைவர் சு.மணிகண்ட தேவர், மதுரை மாவட்ட ஆலோசகர் அ.கி.கணேசத்தேவர், மதசார்பற்ற ஜனதாதளம் மாநில பொதுச்செயலாளர் க.ஜான்மோசஸ், மக்கள் சட்ட உரிமை இயக்கம் தலைவர் ப.அண்ணாதுரை, நவீன நீர்வழிச்சாலை தலைவர் ஏ.சி.காமராஜ், வைகை டிரஸ்ட் நிறுவனர் அண்ணாதுரை, இந்து இளைஞர் சேனா மாநில தலைவர் எம்.சோலைக்கண்ணன், இந்து இளைஞர் சேனா மாநில அமைப்பாளர் கே.ரவிக்குமார், நம்மாழ்வார் சமூக சேவை அறக்கட்டளை நிறுவனர் கே.ஆர்.சித்தன், இயற்கை ஆர்வலர் வழக்கறிஞர் இ.த.சீமான் மற்றும் பல்வேறு இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

முன்னதாக மதுரை கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர் இல.அமுதன் வரவேற்புரை ஆற்றிட வைகை நதி மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் எம்.மணிகண்டன் நன்றியுரை ஆற்றினார்.

Thursday, April 12, 2018

mukkulathor logo

mukkulathor logo / moovendar logo / kallar / maravar / agamudayar / maruthu pandiyar / thevar

Saturday, March 31, 2018

ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி 258 வது பிறந்த நாள் விழா


இராமநாதபுரம் சீமை அரசாண்ட மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் 258 வது பிறந்த நாள் விழா அரசு விழாவாக ஆண்டுதோறும் மார்ச் -30 அன்று நடத்தப்பட்டு வருகிறது. ஆங்கிலேய ஆட்சியாளர்களின் அத்துமீறல்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மாமறவர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் பிறந்த நாளை மதுரை மாவட்ட மறத்தமிழர் சேனை வெகு விமரிசையாக கொண்டாடியது.

மதுரை மாவட்ட செயலாளர் து.தினேஷ் அவர்களின் தலைமையில் 30.03.2018 அன்று மதுரையில் நடைபெற்ற விழாவிற்கு மாநில துணை பொதுச்செயலாளர் மு.முத்துக்குமார் அவர்களும் மாநில துணை பொருளாளர் சுவ.அருணாச்சலம் அவர்களும் முன்னிலை வகித்தனர். மதுரை மாவட்ட தலைவர் சு.மணிகண்டத் தேவர் வரவேற்புரை ஆற்றிட மதுரை மாவட்ட பொருளாளர் பெ.திருப்பதி தேவர் இறுதியில் நன்றியுரை ஆற்றினார்.

மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் சு.புதுமலர் பிரபாகரன் அவர்கள் கலந்து கொண்டு மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மற்றும் மதுரை மாவட்ட இளைஞர் சேனை செயலாளர் கி.உலகநாதன், பழங்காநத்தம் பகுதி இளைஞர் சேனை செயலாளர் இரா.அருள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு மாமன்னரின் படத்திற்கு மரியாதை செலுத்தினார்கள்.

Friday, March 16, 2018

மேட்டுநீரேத்தான் தேவர் சிலை பிரச்சனை - வட்டாட்சியர் சந்திப்பு


மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், மேட்டு நீரேத்தான் கிராமத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு கிராம பொதுமக்கள் அனைவரும் இணைந்து தெய்வீகத்திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு தனியாருக்கு சொந்தமான பட்டா இடத்தில் ஆலயம் அமைத்தனர். திறந்த வெளியில் இல்லாமல் கோவிலாக கட்டிடத்தை எழுப்பி தேவர் திருமகனாருக்கு சிலை வைத்தனர்.

ஜெயலலிதாவிற்கும், எம்.ஜி.ஆர்க்கும் திடீர் திடீரென சிலை திறந்து வரும் தமிழக அரசு தேவர் திருமகனாருக்கு சிலை திறப்பதை மட்டும் தடுக்கும் நோக்கத்தோடு இருப்பது போல, காவல்துறையின் மூலம் கோவில் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தியதோடு, சிலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வந்த மரியாதைக்குரிய சகோதரர் எம்.கே.கணேசன் அவர்களின் மீது சோழவந்தான் காவல் நிலைய குற்ற எண்.327/2016 இன் கீழ் வழக்கு பதிவு செய்தது. இதன் காரணமாக நீண்ட நாட்களாக தேவர் சிலை திறக்கப்படாமலும், கட்டிடப்பணிகளும் முழுமையாக நடைபெறாமல் இருந்து வந்தன.

மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் 19.01.2018 அன்று மேட்டுநீரேத்தான் கிராமத்திற்கு இயக்க நிர்வாகிகளோடு நேரில் சென்று சிலை அமைப்பு குழுவினர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து சிலை அமைக்கும் பணிக்கு அரசு தவறுதலாக ஏற்படுத்தி வரும் தடங்களுக்கு எதிராக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை விரைந்து பணியாற்ற உத்தரவிட்டிருந்தார். மறத்தமிழர் சேனை சார்பில் கட்டிட பணிகளை மீண்டும் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 15.03.2018 அன்று வாடிப்பட்டி வட்டாட்சியர் பார்த்திபன் அவர்கள் தலைமையில் சிலை அமைப்பது குறித்த பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்தில் மாநில துணைப் பொதுச்செயலாளர் மு.முத்துக்குமார், மதுரை மாவட்ட செயலாளர் து.தினேஷ், மதுரை மாவட்ட தலைவர் மணிகண்டன், மதுரை மாவட்ட பொருளாளர் பெ.திருப்பதி தேவர், மேட்டுநீரேத்தான் எம்.கே.கணேசத்தேவர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Saturday, January 13, 2018

தை பொங்கல் திருநாள் வாழ்த்து அறிக்கை

தமிழரின், தமிழின் பண்பாட்டு அடையாளங்களை காத்து, உலகளாவிய அளவில் தமிழ் நிலத்தின் புகழை பரவல் செய்து கொண்டிருக்கும் தமிழ்ச்சாதி தமிழர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

உலக அரங்கில் அனைத்துக்கும் காரணம் அமைத்து கடைபிடித்த ஒரே இனமாகிய தமிழர்கள் நாம் என்பதும், அதனின் தலையாய இனக்குழுக்கள் யாம் என்பதும் பிறப்பின் மகிழ்வை ஒவ்வொரு நாளும் உணர்த்திச் செல்கிறது. இயற்கையோடு இணைந்து வாழ்வதே மனித வாழ்க்கையின் நியதி. அந்த இயற்கைக்கும், தம்மோடு தோழமையாக நின்று மண்ணை பண்படுத்தி பயனடைய உழைத்த காளைகளுக்கும் நன்றி செலுத்தும் திருநாளாக அமைவதே தை பொங்கல் திருநாள் ஆகும். உலகத்தமிழர்கள் அனைவரும் ஒற்றைக்கருத்தோடு நின்று மகிழும் பொங்கல் திருநாளில் மறத்தமிழர் சேனை குடும்பத்தின் சார்பில் வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்கிறது நன்னூல் நூற்பா அதன்படி, தமிழர்கள் அனைவரும் காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதைக்கு உதவாத பழைய சிந்தனை தடைவாதங்களை தவிர்த்துவிட்டு இன்றைய நவீன உலகியலுக்கு உகந்த கருத்தாக்கங்களோடு முன்னோர் கடைபிடித்த, பாதுகாத்த பண்பாட்டு அடையாளங்களோடு வீரியத்தோடு களம் அமைக்க; போராட வேண்டிய நேரமிது.

Monday, November 20, 2017

தமிழ்நாடு அரசுப்பணி தேர்வாணையம் தமிழர்களுக்கு இழைக்கும் துரோகம்

தமிழக அரசியல் களம், ஆட்சி அதிகாரம், வர்த்தகம், கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அடகு தொழில்  என வெளி மாநிலத்தவர்களின் கோரப்பிடிக்குள் தமிழகம் சிக்கித்திணறி வருகிற இன்றைய சூழல்களில் மேலும் தமிழர்களின் வாழ்வியலை முடக்கும் விதமாக தமிழ்நாடு அரசுப்பணி தேர்வாணையம் வெளி மாநிலத்தவர்களுக்கு அரசுப்பணிகளை திறந்து விட்டிருக்கிறது. பணியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ் தேர்வில் வென்றால் போதும் என்கிறது.

தமிழகம் தவிர்த்த மற்ற மாநில அரசுகள் அனைத்தும் மொழிவழி தேசிய கருத்தியலோடு தனது இனம், தனது மொழி, தனது மக்கள், தனது நாடு என மிகச் சரியாக செயல்படுவதோடு, தமது மாநில எல்லைகளுக்குள் இருக்கக்கூடிய மத்திய, மாநில அரசுகளின் வேலைகளோடு தனியார் துறைகளின் வேலைவாய்ப்புகளிலும் மண்ணின் மைந்தர்களுக்கே முக்கியத்துவம் அளித்து வருகின்றன. மீதமாகி கடலிலே கலந்துகொண்டிருக்கும் நீரைக்கூட தருவதற்கு தயாராக இல்லை.

இத்தகைய சூழலில், தமிழகம் மாற்று மொழியினர்களின் வேட்டைக்காடாக தொடர்ந்து நீடித்து வருவதும், தமிழர்களுக்கு அரசுப்பணி வழங்க வேண்டிய தேர்வாணையமே உடன்போவதும் கண்டனத்துக்குரியதாகும். ஏழை எளிய மக்களை எல்லாவற்றிற்கும் வங்கிகளுக்கு இழுக்கும் நிலையில், படிப்பறிவு இல்லாத பாமர மக்களுக்கு சேவை செய்வதற்கென்றே தேசிய வங்கிகளில் தமிழறியாத அலுவலர்களின் கூட்டம் நிரம்பி வழிவதும், ஆட்சிப்பணி, காவல்பணி போன்ற உயர்பதவிகளில் மாற்று மொழியினர்கள் அதிகரித்து வருவதும் கண்டு வருகிறோம். எஞ்சி மிஞ்சி நிற்கும் ஒன்றிரண்டு அரசுப்பணிகளுக்கும் ஓட்டுமொத்த தமிழ்ச் சாதியினர்களும் போராடி வருகின்றனர். இந்நிலையில், இதுபோன்ற அறிவிப்புகளால் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் அரசுப்பணி என்பது பெருங்கனவாய் ஆக்கப்பட்டிருக்கிறது.


தமிழர்களுக்கு பெருங்கேடு விளைவிக்கவிருக்கும் இந்த அறிவிப்பினை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென தமிழ்நாடு அரசுப்பணி தேர்வாணையத்தை மறத்தமிழர் சேனை சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

சங்கரபதி கோட்டை வரலாற்று மீட்பில் - அரசின் மெத்தனம்

சிவகங்கை மாவட்டம் கரைக்குடியில் இருந்து தேவகோட்டை நோக்கி செல்லும் வழியில் முட்புதர்களுக்குள் சிதைந்தபடி கம்பீரமாக காட்சியளிக்கிறது சங்கரபதி கோட்டை. இப்போது ஆள் நடமாட்டமின்றி குடிமகன்களின் புகலிடமாக இருந்துவரக் கூடிய இக்கோட்டையானது, பல வரலாற்று வீரம் மிகுந்த நிகழ்வுகளுக்கு சாட்சியாக நின்றுகொண்டிருப்பதை நாம் மறந்துவிட இயலாது.

பதினாராம் நூற்றாண்டைச் சார்ந்த இக்கோட்டை மதுரை திருமலை நாயக்கர் மகாலைப் போன்ற அளவில் பெரிய தூண்களையும், கட்டிட அமைப்பையும் கொண்டதாகும். கட்டிடம் மற்றும் தூண்கள் சுடாத செங்கற்கல், கருப்பட்டி, கடுக்காய் மற்றும் முட்டையின் வெள்ளை கருவை கலந்து கட்டப்பட்டுள்ளன. சுமார் ஐம்பது ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கோட்டைக்குள் குளம்போல பெரிய பள்ளம் வெட்டப்பட்டு அதற்குள் போர்ப்பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

இராமநாதபுரம் மன்னர் சேதுபதிக்கு தொண்டியை சார்ந்த இஸ்லாமியர் ஒருவர் இருநூறு குதிரைகளைப் பரிசாகக் கொடுத்துள்ளார். அந்த குதிரைகளை தமது படைப்பிரிவில் இணைத்து பராமரிக்க; பயிற்சி அளிக்க திறமையான ஆள் தேடினார் சேதுபதி மன்னர். குதிரைகளை பராமரிக்க ஹைதர் அலி தமது தளபதிகளில் ஒருவரான சங்கரபதியை அனுப்பி வைத்துள்ளார். அவரது நினைவாகவே அக்கோட்டையானது சங்கரபதிகோட்டை என வழங்கலாயிற்று.

மன்னர் சேதுபதி தன்னுடைய மகளான, வரலாற்று நாயகி வேலுநாச்சியார் அவர்களை சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதத் தேவர் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தபொழுது சீதனமாக சங்கரபதிக் கோட்டையை வழங்கினார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக திரண்ட சிவகங்கை வீரர்களுக்கு மருது சகோதரர்கள் இக்கோட்டையில் தான் வாள் பயிற்சி அளித்து வந்துள்ளனர். பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் கெட்டிபொம்மு நாயக்கரின் சகோதரர் ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுக்க இவ்விடத்தை பயன்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க சங்கரபதிக்கோட்டை தற்போது சிதிலமடைந்து இடியும் தருவாயில் இருந்து வருகிறது. இக்கோட்டையை அரசு சீரமைத்து, சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டுமென பலதரப்பட்ட மக்களும் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் அவர்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களிடம் கோரிக்கை வைத்தார். சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் 110 விதியின் கீழ் சங்கரபதி கோட்டையை சீரமைப்பு செய்திடவும், சுற்றுலாத்தலமாக அறிவிக்கவும் அரசாணை வெளியிட்டு நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு செய்தார்.

இந்நிலையில் நான்காண்டுகளைக் கடந்தும் சங்கரபதி கோட்டை சீரமைக்கப்படாமல் முட்செடிகளுக்குள் முழுமையாக அழியும் நிலையிலேயே இருந்து வருகிறது. தற்போது அறிவிப்பினை வெளியிட்ட ஜெயலலிதா அவர்களும் மறைந்து விட்டார். மேலும், காலம் தாழ்த்தாமல் அறிவிக்கப்பட்ட நிதியினை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் சு.புதுமலர் பிரபாகரன் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இருந்து தேவகோட்டை செல்லும் வழியில் முட்புதர்களால் மறைக்கப்பெற்று, பராமரிப்பின்றி அழியும் நிலையில் சங்கரபதிக் கோட்டை இருந்து வருகிறது. இந்த கோட்டையானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இந்த கோட்டையானது 16-ஆம் நூற்றாண்டை சார்ந்ததாகும். மதுரை திருமலை நாயக்கர் மகாலைப் போன்ற தூண்களோடு கட்டிட கலையின் அடையாளமாகவும் இருந்து வருகிறது. சேதுபதி மற்றும் சிவகங்கை ஆட்சியாளர்களின் கீழ் போர்ப்பயிற்சி மேற்கொள்ளும் இடமாகவும், ஆயுத கிடங்காவும் இருந்து வந்திருக்கிறது. மருதுசகோதரர்கள் சிவகங்கை படை வீரர்களுக்கு போர்பயிற்சி அளித்துவந்ததுடன், ஊமைத்துரைக்கு அடைக்கலமும் கொடுத்த மிகப்பெரிய அரணாகும்.

தற்போது, சங்கரபதிக்கோட்டையானது முற்றிலும் அழிந்து போகும் நிலையில் இருந்து வருகிறது. தேவர் சமூகத்தை சார்ந்தவர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் இந்த கோட்டையை சீரமைக்க வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறார்கள். மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களிடம் அப்போதைய மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் அவர்கள் இந்த கோட்டையை சீரமைக்க கோரிக்கை விடுத்தார்.

14.05.013 அன்று தமிழக சட்டமன்றத்தில் மாண்புமிகு முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் 110 விதியின் கீழ் சங்கரபதிக் கோட்டையை சீரமைக்க மூன்று கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாகவும், சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்படும் எனவும் அறிவிப்பு செய்து ஆணை பிறப்பித்தார். இந்நிலையில் தற்போது வரை வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோட்டையானது சீரமைக்கப்படாமல் சிதைந்துகொண்டே வருகிறது.

ஆகவே, தாங்கள் இதனை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்ட நிதியினை உடனே ஒதுக்கீடு செய்து கோட்டையை புனரமைப்பு செய்திடவும், சுற்றுலாத்தலமாக அறிவிப்பு செய்துடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அன்புடன் கோருகிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.