பல்வேறு வரலாற்று ஆதாரங்களை வைத்து எழுதப்பட்ட நாவல் சு.வெங்கடேசனின் காவல் கோட்டம். அதின் சில சுவாரஸ்யமான பகுதிகளை திரைக்கதையாக அமைத்து அரவான் படத்தை உருவாக்கி இருக்கிறார் வசந்தபாலன். ’காவல் கோட்டம்’ சாகித்திய அகாதமி விருது பெற்ற நாவல் என்பது குறிப்பிடத்தக்கது. 18ஆம் நூற்றாண்டில் நடக்கிற கதை என்ற சவாலை ஏற்ற வசந்தபாலன், கதாபாத்திரங்களின் உடை, சிகை, பேச்சு, உடல் அசைவுகள், கலை, ஒளிப்பதிவு என அனைத்திலும் அந்த காலகட்டதின் உணர்வை ஏற்படுத்துகிறார். இதுவே வசந்தபாலனின் வெற்றி என கருதலாம்.





