★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Sunday, August 7, 2011

மருது பாண்டியர் மறைக்கப்பட்ட உண்மைகள்

“நான் இந்தப் பக்கங்களில் கூறியிருக்கும் நிகழ்வுகள் பன்னிரெண்டு, பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னால், ராணுவ அதிகாரி ஒருவரால் என்னிடம் கூறப்பட்டவை. அவர் நிகழ்வுகளை நேரில் பார்த்தவர்.
என்னிடம் அவர் சொன்னது இது: ‘உன்னால் இந்த உண்மைக் கதையை உலகத்திற்குச் சொல்ல முடியும். என்னால் முடியாது.’ ”
இது கோர்லே என்னும் ஆங்கிலேயர் எழுதிய புத்தகத்தின் தொடக்கம். இந்தப் புத்தகம் 1813இல் எழுதப்பட்டது. மருது பாண்டியரின் கதையைச் சொல்வது. (எனக்குத் தெரிந்த அளவில்) வரலாற்று ஆசிரியர்களின் பார்வையில் இன்றுவரைக்கும் படாதது. பதிப்பாளர் அகப்படாததால் (அல்லது பதிப்பிக்க மறுத்ததால்) அவராலேயே பதிப்பிக்கப்பட்டது.

வீரத்திலகம் வேலுநாச்சியார் (1780-1789)

மறத்தமிழர் சேனை இயக்கத்தின் அதிகாரபூர்வ கட்டுரை 

இராமநாதபுரம் மன்னர் (1749-62) செல்லமுத்து சேதுபதி, சிவகங்கைக்கு அருகிலுள்ள 'சக்கந்தி” என்னும் ஊரைச் சேர்ந்த முத்தாத்தாள் நாச்சியார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஓர் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அவர்கள் அக்குழந்தைக்கு வேலு நாச்சியார் எனப் பெயரிட்டார்கள். செல்லமுத்து சேதுபதி தனது மகள் வேலு நாச்சியாரைக் கல்வி - கேள்விகளில் சிறந்தவராக வளர்த்து ஆளாக்கினார். வேலு நாச்சியார் போர்க்களம் சென்று, வாளெடுத்துப் போர் புரியும் ஆற்றலும் விளங்கினார். அவர் ஒரு சிறந்த வீராங்கணையாக உருவாக்கப்பட்டார். சிவகங்கைச் சீமையின் இரண்டாவது மன்னர் முத்து வடுகநாதப் பெரிய உடையத் தேவருக்கு, வேலுநாச்சியார் திருமணம் செய்து வைக்கப்பட்டு அவரது பட்டத்து ராணியானார்.

Friday, August 5, 2011

மறவர் முன்னேற்ற சங்க 4 ஆண்டு துவக்கவிழா

மறவர் முன்னேற்ற சங்க 4 ஆண்டு துவக்கவிழா புகைப்பட காட்சிகள்



மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பொன்னாடை போர்த்துகின்றனர்.

மாட்சிமை தங்கிய இராமனாதபுரம்  மன்னர் ந.குமரன்சேதுபதி அவர்கள் விழாவிற்கு வருகைதருகிறார். உடன் எஸ்.ஆர்.தேவர், புதுமலர் பிரபாகரன, வீ.கே. இராமசாமி தேவர்.

Tuesday, August 2, 2011

சமூக நினைவுகளும் வரலாறும்

                                                                             சமூக நினைவுகளும் வரலாறும்
                                                                                          ஆ.சிவசுப்பிரமணியன்

சமூகத்தின் வரலாறு என்பது பல்வேறு வகைமைகளாகப் பார்க்கத்தக்கது. இதில் பண்பாட்டு வரலாறும் ஒன்றாகும். பண்பாட்டு வரலாற்று வரைவிற்கான தரவுகளில் ஒன்றாக ‘சமூக நினைவு’ அமைகிறது. பீட்டர் பர்க் என்பவர் ‘சமூக நினைவாக வரலாறு’ (History as social memory) என்று இதைக் குறிப்பிடுவார். ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வரலாறு எப்படி அச்சமூகத்தின் நினைவுகளில் வாழ்கிறதோ அதுபோல் ஒரு குறிப்பிட்ட ஆட்சி மரபின் செயல்பாடுகளும் சமூக நினைவாகத் தொடர்கின்றன. இந்நினைவானது அடித்தள மக்களின் வரலாற்று வரைவிற்குப் பெரிதும் துணைநிற்கும் தன்மையது.

ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி

வீரமும் மானமும் விஞ்சியவர் தமிழ் மறவர். இவர்களது தொன்மையையும், வாழ்க்கைச் சிறப்பையும் சங்க இலக்கியங்களான அகநானுhறு , புறநானுhறு, நற்றினை, பெரும்பாணாற்றுப்படை ஆகியவை ஏற்றிப் போற்றுகின்றன. விழுடககொடை மறவர், பினைகழல் மறவர், பெருந்தொடை மறவர் என்பன அந்த இலக்கியங்கள்மறவர்களுக்குச் சூட்டியுள்ள புகழாரங்கள்.

எதிரி எமனாக இருந்தாலும் அவனை அழித்து ஒழிப்பவர் மறவர் என, பகை என கூற்றம் வரினும் தொலையான் என்பது மறவர்களுக்குக் கூலித் தொகை கூறும் கட்டியமகும். பத்தாம் நுhற்றாண்டில் சோழர்கள் பெரும் நிலை எய்துவதற்கும், பதின்மூன்றாம் நுhற்றாண்டில் பிற்காலப் பேரரசர்களாகப் பாண்டியர் பெருமிதம் கொள்வதற்கும் அரசப்படையாக நின்று உதவியவர்கள் இந்த மறவர்கள். இவர்கள் மிகுதியாகவும் தொகுதியாகவும் வாழ்ந்த நாடு (இன்றைய இராமநாதபுரம், சிவகங்கைச் சீமைகள்) மறவர் சீமை என வாலாற்றில் குறிக்கப்படுகிறது.
இவர்களது மூத்தகுடிமகனான மறவர் சீமை மன்னர், ” புனித சேது காவலன்” என வழங்கப்பட்டார். கி.பி. பதினைந்தாம் நுhற்றாண்டு முதல் தமிழ்மொழிக்கும், ஆன்மீக வளர்ச்சிக்கும் அவர்கள் அளித்துள்ள மகத்தான பங்கு காலத்தால் மறைக்க முடியாதது. அவர்களது வீரம், கொடை, புலமை ஆகியவற்றைப் போற்றும் இலக்கியப் படைப்புகளும் தனிப் பாடல்களும் ஏராளம். அவர்களிடமிருந்து முத்தமிழ் புலவர்களும், கலைஞர்களும் பெற்ற ஊர்களும், மான்யங்களும் இன்னும் மிகுதியானவை.
இத்தகைய புகழுக்குரிய வரலாற்று நாயகர்களான சேதுமன்னர்கள் இந்திய நாட்டு விடுதலை வேள்வியிலும் தங்களது முத்திரையைப் பதித்துச் சென்று இருப்பது நம்மையெல்லாம் வியக்க வைக்கின்றது.

சேதுபதி மன்னர்கள் வரலாறு

வகை:பொது
எழுத்தாளர்:பேரா. புலமைவேங்கடாசலம்
பதிப்பகம்:பாவை பப்ளிகேஷன்ஸ்
ISBN :81-7735-831-6
Pages :85
பதிப்பு :1
Published Year :2010
விலை :ரூ.40 


சேதுபதி மன்னர்கள் மறவர் இனத்தில் தோன்றிய மன்னர்கள் ஆவார்கள். இவர்கள் தென்பாண்டிச் சீமையில் புகழ்வாய்ந்த நிலையில்

மறவர் படையின் வீர மிகுதி -குறள்

குறள் 771: என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்.
விளக்கம் : பகைவரே! இதற்குமுன் என் தலைவனது வலிமை அறியாமல் அவனுக்கு எதிர் நின்று போரேற்று இறந்த பின்பு நடுகல்லில் நின்ற மறவர் பலராவர் ஆகையால் நீவிரும் அங்கனம் நடுகல்லில் நில்லாமல் உம் உடலோடு நிற்க விரும்பினால் என் தலைவன் எதிரே போரேற்று நிற்காதீர்.