★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Tuesday, August 2, 2011

தன்மானத் தமிழ் மறவர் சி.இலக்குவனார் நூற்றாண்டு விழா, ஒரு கண்ணோட்டம்.

வரலாறு காணாதபடி, பெரும் பனிப்பொழிவு ஆட்கொண்ட பூமியில், இளவேனிற் காலம் திரும்பியிருந்தது. கூடவே, மலையெனக் குவிக்கப்பட்ட பனிப்பொழிவும் முழுவதுமாய்க் கரைந்து விட்டிருந்தது. குளிரில்லாத இதமான காற்று தழுவிய நேரமது; பிற்பகல் சரியாக மணி இரண்டு!!

மேரிலாந்து மாகாணத்தில் இருக்கும் கொலம்பியா நகரம். அமெரிக்காவிலேயே முனைவர்கள் அதிகமாக வாழும் ஊர் இதுவாகத்தான் இருக்கும்! அந்நகரத்தின் மைய நூலகத்தில் தன்மானத் தமிழ் மறவர் சி.இலக்குவனாருக்கு நூற்றாண்டு விழாவும், புறநானூற்றுக் கருந்தரங்க நிகழ்ச்சியும்.

Monday, August 1, 2011

மறவர் உறவு முறை








எழுத்தாளர் / தொகுப்பாளர் : சின்னத்தம்பி.எம்.ஏ
பதிப்பு : முதற் பதிப்பு(ஜூன் 2002)
விலை : 150 .00  In Rs
பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 368
ISBN :
பதிப்பகம் : இளவழகன் பதிப்பகம்
முகவரி : 16, முதல் தளம்ஞ இரண்டாவது தெரு

பாலாஜி நகர்

சென்னை   600014

இந்தியா
உறவுமுறையானது, தனது வீச்சையும் வீரியத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்ற காலமிது. மரத்தை மண்ணோடு சேர்த்துப் பிடித்து பிணைத்துக் கொண்டிருக்கும் ஆணி வேராகவும், பக்க வேர்களாகவும் உற்றார் உறவினர், குடும்பத்தைச் சமூகத்தோடு சேர்த்துப் பிடித்து பிணைத்துக் கொண்டிருந்த காலத்தில் உறவு முறையானது கொடிகாட்டிப் பறந்துகொண்டிருந்தது......

இராமநாதபுரமும் சிவகங்கையும் - வரலாறு.

இப்போது இராமநாதபுரம் மாவட்டமாக உள்ள பகுதி மற்றும் சிவகங்கை மாவட்டம், விருதுநகர் மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டங்கள் அடங்கிய பகுதி பாண்டிய நாட்டின் கீழ்த்திசைப் பகுதியாக இருந்தது. இந்த நிலப்பரப்பு மறவர் நாடு என்றும் அழைக்கப்பட்டது. மறவர் நாடு பாண்டிய பேரரசி...ன் ஆட்சிக்குள் அடங்கிய பகுதியாகவே எப்போதும் விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. மறவர் நாட்டைச் சேர்ந்தவர்கள் அன்றும் சரி, இன்றும் சரி பாண்டியகள் என்றே சாதாரணமாக அழைக்கப்படுகின்றார்கள். சாதாரணப் பொது மக்களும் பெருமையோடு தாங்களுக்குப் 'பாண்டியர்” என்று பெயர் வைத்துக் கொள்கின்றார்கள். மறவர் நாடு பிற்காலத்தில் 'சேதுநாடு” என்றழைக்கப்பட்டது. 'சேது” என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்கு புராண காலச் செய்தி ஒன்று உள்ளது. 'சேதுநாடு” என்று அழைக்கப்படும் இன்றைய இராமநாதபுரம் இராமாவதாரத்தோடு பெரிதும் இணைத்துப் பேசப்படுகிறது. இராவணனின் நாடாக இருந்த இலங்கைத் தீவுச் சீதாதேவி சிறை அடைக்கப்பட்டிருப்பதை அனுமார் வழியாக தெரிந்து கொண்ட இராமபிரான் அங்கு செல்ல வேண்டிச் சுக்கீரவனின் வானரப் படைகளைக் கொண்டு பாலம் அமைத்தார். அந்தப் பாலத்திற்குத் திருவணை என்றும் 'சேது” என்றும் பொருள் உள்ளது. அந்தப் புனிதமான பாலத்திற்கு சேதுவிற்கு பொருத்தமான காவலர்களை நியமிக்க நினைத்தாராம் இராமபிரான். அச்சமயம் அந்த பகுதியில் வீரத்தோடு விளங்கிய மறவர்குலத் தலைவர் ஒருவரை நியமித்தார். அவருக்கு சேதுபதி என்று பெயராகி வந்ததாம். அப்படிப்பட்ட புனிதமான வழியில் வந்தவர்கள் சேதுபதிகள் என்று புராண கால வழி வந்த செய்திகள் கூறுகின்றன. இந்த சேதுபதி மரபினருக்கு 'திருவணை”க் காவலன் என்ற பெருமைக்குரிய பெயரும் உண்டு. இராமபிரானுக்கு பாலம் கட்ட உதவி செய்து வானரர்கள் கட்டிய பாலத்திற்குக் காவல் உதவி சேது என்ற பாலத்தைக் காத்து, சேதுபதி திருவணைக் காவலன் என்ற சிறப்புப் பெயர்களைப் பெற்றது என்பது எல்லாம் புராண காலச் செய்திகள் என்று சொல்பவர்களும் உண்டு. மதுரையை ஆட்சி செய்த முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் வரலாற்று ஆவணங்கள் இராமநாதபுரம் சீமையை ஆண்ட அரசர்களை சேதுபதி என்றே அழைக்கின்றனர்.

அஞ்சா மறவர்

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர். 


  • குறள் எண் : 778




  • அதிகாரம் : படைச்செருக்கு




  • இயல்: படையில்




  • பால் : பொருட்பால்







  • திரு மு.வரதராசனார் உரை

    போர்வந்தால் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவர்.







  • திரு மு.கருணாநிதி உரை

    தலைவன் சினந்தாலும் சிறப்புக் குறையாமல் கடமை ஆற்றுபவர்கள்தான், போர்களத்தில் உயிரைப் பற்றிக் கலங்காத வீர மறவர்கள் எனப் போற்றப்படுவர்.




  • திரு சாலமன் பாப்பையா உரை

    போர் வந்தால் தம் உயிர்க்கு அஞ்சாது செல்லும் வீரர், அப்போரை வேண்டா என்று அரசு சினந்து தடுத்தாலும், தம் வீரத்தில் குறைய மாட்டார்.




  • திரு.பரிமேலழகர் உரை

    உறின் உயிர் அஞ்சா மறவர் - போர்பெறின் தம்முயிர்ப் பொருட்டு அஞ்சாது அதன்மேற் செல்லும் வீரர்; இறைவன் செறினும் சீர்குன்றல் இலர் - தம் இறைவன் அது வேண்டா என்று முனியினும் அவ் வீரமிகுதி குன்றார். (போர் பெற்று அறியாமையின், அது பெற்றால் அரசன் தடுப்பினும் நில்லார் என்பதாம். பிறரும் 'போரெனிற்புகலும் புனைகழல் மறவர்'(புறநா.31) என்றும்,'புட்பகைக்கு ஏவானாகலின் சாவேம் யாம் என நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்ப'(புறநா.68) என்றும் கூறினார்.)








  • மறவர் maravar

     செங்கை மறவர் என்ற பாடலைப் பற்றி பார்ப்போம். 

      இப்பாட்டின் பெயர் செங்கை மறவர் என்பது. சிவந்த
    கையினையுடைய மறவர் என்பது இதன் பொருள்.
    பாட்டின் கருத்து
        யானைகள் பரந்து செல்ல, விரைந்து செல்லும் குதிரைகள்
    வீரர்களோடு அணியாகச் செல்ல, கொடியுடைய தேர்கள்
    சுழன்று செல்ல, வேற்படை வீரரைக் கொண்ட காலாட்
    படையினரும் வேந்தரும் குறுநில மன்னரும் ஒருங்கே சேர்ந்து
    செல்ல, மிக்க வலிமையோடு மனம் செருக்கி வந்தான் மோகூர்ப்
    பழையன். அவனுடைய படைத்திறன் சிதையுமாறு தாக்கினர்
    சேர வீரர்கள். பகைவரின் குருதியில் நனைந்ததனால் போர்
    வீரர்களின் கைகள் சிவந்தன. வீரர்களின் மார்பிலிருந்து ஒழுகிய
    குருதி மண்ணில் பாய்ந்து மழைநீர்க் கலங்கலைப் போல்
    பள்ளம் நோக்கிப் பாய்ந்தது. பகைவரின் பிணங்கள் குவியுமாறு
    ஊர்கள் பலவற்றையும் பாழ் செய்தான் குட்டுவன். வெற்றி முரசு
    முழங்கப் பழையனின் செல்வம் முழுவதும் கெட்டொழிய அங்கு
    வாழ்ந்தோர் பலரையும் கொன்றான். கரிய கிளைகளைக்
    கொண்ட காவல் மரமான வேம்பு குட்டுவனால் வீழ்த்தப்
    பெற்றது.
        சினமிக்க போர் செய்த குட்டுவனைக் கண்டு வருவதற்காக
    நாங்கள் போகிறோம். அசையும் கூந்தலையும் ஆடும்
    இயல்பையும் கொண்ட விறலியர்களே! நீங்களும் வாருங்கள்.
    இசைப்பாட்டில் திறமை மிக்க உங்கள் சுற்றத்தார் உடையும்
    உணவும் பெறுவர்''. இவ்வாறு சேரன் கொடைச் சிறப்பைப்
    படைச் சிறப்போடு சேர்த்துப் புகழ்கிறார் பரணர். அவன்
    நாடுகளை வெல்வதே விறலியர் பாணர் போன்றவர்களுக்குப்
    பரிசு வழங்குவதற்காகத்தான் என்கிறார்.
        அள்ளி அள்ளிக் கொடுக்கும் வள்ளலின் கை சிவந்து போகும்
    போதுதான் அதைச் செங்கை என்று பாராட்டுவது வழக்கம்.
    இங்குச் சேர வீரரைச் செங்கை மறவர் என்கிறார் பரணர்.
    ஆனால் அவர்களது கை பகைவரின் இரத்தத்தால் செங்கை
    ஆனது. நம் போன்ற கலைஞர்களுக்குப் பொன், பொருளை
    வாரிக் கொடுப்பதற்காகப் போர் செய்ததால் அந்தக் கை அன்றே
    சிவந்து - வள்ளலின் செங்கை ஆகிவிட்டது என்று நயமாகக்
    குறிப்பு மொழியால் சொல்கிறார். இந்தப் பாடல் செங்கை
    மறவர் என்று பெயர் பெற்றது ஏன் என்று புரிந்து கொண்டீர்கள்
    அல்லவா?
    பாட்டின் துறை முதலியன
        இப்பாட்டின் துறை விறலியாற்றுப்படை. விறலி என்பவள்
    நடனம் ஆடுபவள். வேந்தனிடம் பரிசில் பெற்ற ஒருவன்
    விறலியை நோக்கி, அவனிடம் சென்றால் இவ்வாறு நீயும்
    பரிசில் பெறலாமென்றும், எம்முடன் வந்தால் இன்னது
    பெறலாமென்றும்    கூறுவது    விறலியாற்றுப்படை ஆகும்.
    வண்ணமும் தூக்கும் முந்திய பாட்டுக்குக் கூறப்பட்டனவே.
    பாட்டின் பெயர் செங்கை மறவர்.



    -maraththamizhar senai

    மறவர் கதைப்பாடல்கள்

    ஆசிரியர்: முனைவர் மு.ஞானத்தாய்
    வெளியீடு: காவ்யா பதிப்பகம்
    விலை:  ரூ.150

     காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை-600 024. (பக்கம்: 304)
    இனவரைவியல் ஆய்வு நூல் இது. திருநெல்வேலி மாவட்ட மறவர் இனக் கதைப்பாடல்கள் பற்றியது. முக்குலத்தோரில் கள்ளர், அகமுடையார் குறித்துப் பொதுவாகவும், மறவர் பற்றிச் சிறப்பாகவும் "மறவரின் வரலாறும் வாழ்வும்' என்னும் முதல் இயல் பேசுகிறது.
    கள்ளர் சோழர் வழித்தோன்றல், அகமுடையார் சேரர் வழித்தோன்றல், மறவர் பாண்டியர் வழித்தோன்றல் எனக்குறித்து அவற்றுக்குரிய புராணம், இலக்கியம், வரலாற்றுச் செய்தி, வரலாற்று ஆய்வாளர் கருத்து என்பவற்றை ஆதாரமாகக் காட்டி எதிர்கால ஆய்வு ஆழம் காணப் பல வித்துக்கள் இவ்வியலில் ஊன்றப்பட்டுள்ளன.

    "இனவரைவியலும் கதைப்பாடல்களும்' என்னும் இரண்டாம் இயல் இனவரைவு குறித்த விளக்கம், கதைப் பாடல்களின் கதைச் சுருக்கம் என்பவற்றைக் கொண்டுள்ளது. பாடல்கள் வாயிலாக அறியலாகும் கதை நிகழ்ந்த காலம், சூழல் பற்றிய விளக்க முடிவு படிப்பவருக்கு தெளிவை தருகிறது. சீவலப்பேரி பாண்டி நாவல், திரைப்படம் என்னும் வடிவங்களில் மக்களை அடைந்திருப்பது குறிக்கப்பட்டுள்ளது. 1981ம் ஆண்டு நிகழ்ச்சிக்குப் பின் 18 ம் நூற்றாண்டின் கதை இடம் பெறுகிறது. கால வைப்புமுறை நெருடுகிறது."மறவரினக் கதைப்பாடல்களில் சமூகப் பண்பாடுகள்' என்னும் மூன்றாம் இயல் சமூகவியல் நோக்கில் ஆராயப்பட்டுள்ளது. சாதிப்பிரிவு, சிறுதெய்வ வழிபாடு, சகுனம், குறிபார்த்தல், சோசியம், தலையெழுத்து என்பவை பற்றிய மறவர்களின் வாழ்வியல், தனிமனித வாழ்வு, சமுதாய வாழ்வு என்னும் இரண்டிலும் அறியப்படும் வகை, ஆசிரியரின் ஆய்வு முயற்சி அருமைக்கு உரைகல்.

    "நாட்டுப்புற (மறவரின)க் கதைப்பாடல்களில் வரலாற்றுச் சான்றுகள்' என்னும் நான்காவதான இறுதி இயல், விடுதலைப் போரில் இவர்கள் ஆற்றிய பங்கினைப் பேசுகிறது. இரண்டாம் இயலின் தொடர்ச்சியாக இருப்பதால், அங்கு உள்ள பல செய்திகளும் கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன. நூலுக்கு ஒரு முடிவுரை இருந்திருந்தால் இனவரைவியல் ஆய்வுலகுக்குக் கிடைத்துள்ள அருமையான வரவு முழுமை பெற்றிருக்கும். "காவ்யா வெள்ளி விழாச் சிறப்பு வெளியீடு' என்னும் சிறப்புக்குப் பொருந்தும் சிறப்பு இந்நூலுக்கு உண்டு.
     

    செங்கை மறவர்

    துறை: விறலியாற்றுப்படை
    வண்ணம்: ஒழுகு வண்ணம்
    தூக்கு: செந்தூக்கு
    பெயர்: செங்கை மறவர்

    யாமும் சேறுக நீயிரும் வம்மின்
    துயிலுங் கோதைத் துளங்(கு)இயல் விறலியர்
    கொளைவல் வாழ்க்கைநும் கிளைஇனி(து) உணீஇயர்
    களிறுபரந்(து) இயலக் கடுமா தாங்க
    ஒளிறுகொடி நுடங்கத் தேர்தி஡஢ந்து கொட்ப 5
    எஃகுதுரந்(து) எழுதரும் கைகவர் கடும்தார்
    வெல்போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து
    மொய்வளம் செருக்கி மொசிந்துவரு மோகூர்
    வலம்படு குழூஉநிலை அதிர மண்டி
    நெய்த்தோர் தொட்ட *செங்கை மறவர்* 10
    நிறம்படு குருதி நிலம்படர்ந்(து) ஓடி
    மழைநாள் புனலின் அவல்பரந்(து) ஒழுகப்
    படுபிணம் பிறங்கப் பாழ்பல செய்து
    படுகண் முரசம் நடுவண் சிலைப்ப
    வளன்அற நிகழ்ந்து வாழுநர் பலர்படக் 15
    கருஞ்சினை விறல்வேம்(பு) அறுத்த
    பெருஞ்சினைக் குட்டுவன் கண்டனம் வரற்கே.