★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Saturday, July 2, 2011

ஊற்றுமலை ஜமீன் வரலாறு

ஊற்றுமலையென்பது திருநெல்வேலி ஜில்லாவில் இருந்து வரும் ஒரு பழைய ஜமீன். அதில் ஜமீன்தார்களாக இருந்தவர்கள் வீரத்திலும் கல்வியிலும் சிறந்தவர்கள். வடகரையென்னும் சொக்கம்பட்டியில் பெரியசாமிச் சின்னணைஞ்சாத் தேவர் தலைமை வகித்து வந்த காலத்தில் ஊற்றுமலையில் இருந்த ஜமீன்தார் தென்மலையென்னும் சிவகிரியிலிருந்து ஜமீன்தாருக்கு உதவி புரிந்து வந்தனர்.
வடகரையாருக்கு நண்பராகிய சேற்றூர் ஜமீன்தாருக்குப் பல இடையூறுகளை விளைவித்தனர் தென்மலையார். வடகரை ஸ்தானாதிபதியாக இருந்த பொன்னம்பலம் பிள்ளை பல படையுடன் சேற்றூராருக்கு உதவியாக நின்று தென்மலையாரை வென்றனர். அதன்பின் தென்மலையும் அதற்கு உதவியாக நின்ற ஊற்றுமலை ஜமீனும் தம்முடைய நிலையிற் குலைந்தன. ஊற்றுமலை ஜமீன்தார் அப்பகைவர் கையில் அகப்பட்டார்: அவர் தம்முடைய

பாரம்பரியம் காக்கும் ஜமீன்

உயர்ந்து நிற்கும் மதில்கள், உள்ளுக்குள் அரசு அலுவலகங்கள், காரை பெயர்ந்த நிலையிலும், காலம் கடந்தும், சரித்திரத்தை தனக்குள் தக்கவைத்துக்கொண்ட பாரம்பரிய கட்டடங்கள். நவீனம் புகுந்த நிலையிலும், தன்னுள் பழைமையை பறைசாற்றத் துடிக்கும் பெரிய அறைகள் என கம்பீரம் குறையாமல் காட்சியளிக்கிறது ராமநாதபுரம் ஜமீன் அரண்மனை. தென் தமிழகத்தில் பிரிக்கப்படாத பழைய ராமநாதபுரம் மாவட்டத்தின் பெரும் பகுதியை ஆண்டவர்கள் சேதுபதிகள்.
வங்கக்கரையின் அதிபதியாய் முதலில் போகளூரையும், பின் ராமநாதபுரத்தையும் தலைநகராக்கி ஆட்சிபுரிந்தவர்கள். சேதுக் கரைக்கு அதிபதிகளாகத் திகழ்ந்ததால் சேதுபதிகள் என அழைக்கப்பட்டனர். கி.பி.12 ஆம் நூற்றாண்டிலே திருமயம் பகுதியில் விஜயரகுநாத முத்துவயிரிய முத்துராமலிங்க சேதுபதி இருந்துள்ளார். ராமேசுவரம் திருக்கோயில் சுற்றுச்சுவரை கி.பி.15 ஆம் நூற்றாண்டிலேயே உடையான் சேதுபதி கட்டினார்

தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு

முன்னுரை:
14ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் (1320-1323) பாண்டிய மன்னர்களுக்குள் உள்நாட்டுப் போரை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இசுலாமியர்கள் தமிழகத்தின் மீது தங்களது கவனத்தை செலுத்த ஆரம்பித்தனர். மாலிக்காப10ரின் படையெடுப்பு தொடங்கி முகமது துக்ளக் ஆட்சி வரை பல முறை இசுலாமியர் படையெடுப்பு நிகழ்ந்தது. முகமது பின் துக்ளக் ஆட்சி காலத்தில் மதுரை டில்லி சுல்தானியத்தின் ஒரு மாநிலமாக மாற்றப்பட்டது. முகமதுபின்துக்ளக் ஆட்சி காலத்தில் டெல்லியில் ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்திக் கொண்டு மதுரையின் ஆளுநராக இருந்த ஜலாலூதீன் ஆசான் ஷா 1335ல் தன்னை சுல்தானியத்திலிருந்து விடுவித்துக் கொண்டு மதுரை சுல்தனாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவ்வாறு தோன்றிய மதுரை சுல்தானியர்கள் இங்குள்ள இந்துக்களை கொடுமைப்படுத்தியும் மதம் மாற்ற முயற்சியில் ஈடுபட்டதால் மக்கள் சொல்லாத துன்பத்திற்கு ஆளானார்கள். தாங்களை இந்த துன்பத்திலிருந்து விடுவிப்பதற்கு தகுந்த நேரத்தையும் மீட்பவரையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

Friday, March 18, 2011

தமிழர் களம்- கரூரில் புதுமலர் பேச்சு.

தேடிச் சோறுநிதந் தின்று – பல
         சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக வுழன்று – பிறர்
         வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
         கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
          வீழ்வே னென்று நினைத் தாயோ ?
                                     என்கிற மகாகவியின் வரிகளுக்கு ஒப்பான வாழ்வை, இத்தரணியிலே மேற்கொண்டு உதாரண கர்த்தாக்களாக திகழ்கின்ற தனித்தமிழர் சேனையின் தலைவர் அய்யா நகைமுகன் அவர்களே, எங்கெல்லாம் தமிழன் ரத்தம் சிந்துகின்றானோ அங்கெல்லாம் தனது குருதியும் கொட்டப் பட்டதாக துடிதுடித்துப் போகும் உணர்ச்சிக் கவிஞர் அய்யா காசி ஆனந்தன் அவர்களே, தமிழ் நிலத்திற்கு ஒவ்வாத திராவிட அரசியலை வேரறுக்க நித்தமொரு களம் காணும் அறிஞர் குணா அவர்களே, எழுகதிர் ஆசிரியர் அருகோ அவர்களே, தன்மானத் தமிழ் மறவர் கூட்டமைப்பின் தலைவர் புலவர்.பாவிசைக்கோ அவர்களே, மள்ளர் மீட்புக் களத்தின் தலைவர் செந்தில்மள்ளர் அவர்களே, திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்களே, இந்த கரூர் மாநகரத்திலே தமிழர்களத்தின் சார்பில் இங்கே சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த தமிழர் பெருவிழா மாநாட்டிற்கு அழைத்து எமக்கும், எமது இயக்கத்திற்கும் பெருமை சேர்த்த தமிழர்களம் பொதுச்செயலாளர் அண்ணன் திரு.அரிமாவளவன் அவர்களே, நாம் தமிழர் இயக்கத்தின் செரோன் அவர்களே, கூட்டத்திலே பெருந்திரளாக கலந்து கொண்டிருக்கிற ஆன்றோர்களே, சான்றோர்களே, உங்கள் அனைவருக்கும் நான் சார்ந்த மறத்தமிழர் சேனையின் சார்பில்

Friday, January 7, 2011

தேவரின தோன்றல்களே வணக்கம் - maraththamizhar senai

மீண்டும் பெருமை அடைகிறோம் நீங்கள் எங்களிடம் வந்து சேர்ந்ததற்காக.

நமக்கிடையில் "அரசியல் " ஒரு பிரச்சனையாக இனி என்றுமே இருக்க முடியாது . நாம் விலகி விலகிச் செல்ல வேண்டிய அவசியமே இனி இல்லை. இருப்பதையும் நாங்கள் விரும்பவில்லை. அனைவரும் நெருக்கமாகிக் கொண்டிருக்கிறோம். "அரசியல் இனி நமக்கு அடிமை". நாம் அதற்கு அடிமையாயிருந்து சிதறிய காலம் மலையேறிக் கொண்டிருக்கிறது.

இனி அதிகமாக பேசலாம். பயந்து பயந்து குறைவாக பேசவே வேண்டாம்.

Monday, November 29, 2010

மறவர் அரசியல் உரிமை மாநாடு 18.07.2010

மறத்தமிழர் சேனை கட்சி இராமநாதபுரம், மண்டபம் ஒன்றியங்களின் சார்பில் 18-07-2010 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் இராமநாதபுரம் வெங்கடேஸ்வரா மஹாலில் “மறவர் அரசியல் உரிமை மாநாடு மற்றும் முனைவர் ந.இராசையா படத்திறப்பு விழா” நடைபெற்றது.

மறவர் அரசியல் உரிமை மாநாட்டிற்கு மறத்தமிழர் சேனை கௌரவத் தலைவர் முகவைத்தம்பி இ.கணபதி தேவர் அவர்கள் தலைமை வகித்தார். ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி மக்கள் இயக்கத்தலைவர் சி.சுந்தரசாமித்தேவர் அவர்கள் முன்னிலை வகித்தார்.

கீழத்தூவல் நினைவேந்தல் 2010 - வேங்கைகள் வீரவணக்க நாள்

1957 ம் வருடம் கீழத்தூவல் ( keezhaththooval ) மண்ணில் காமராஜ் நாடாரின் வழிகாட்டுதலின்படி கண்ணைக்கட்டி, கைகளைக்கட்டி சுட்டுக்கொல்லப்பட்ட கீழத்தூவல் வேங்கைகள் ஐவருக்கு  53 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் பேரணி-பொதுக்கூட்டம் 14.09.2010 அன்று மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் தலைமையில் கீழத்தூவல் கிராமத்தில் நடைபெற்றது. 

கிராம பொதுமக்களின் சார்பில் காலை 10.00 மணியளவில் இறந்துபோன ஐவரின் நினைவாக முதுகுளத்தூர் - பரமக்குடி சாலையில் கட்டப்பட்டுள்ள நினைவுத்தூன் அருகில் பொங்கல் வைத்து, தேங்காய் பழம், மாலைகளோடு  வழிபாடு நடைபெற்றது. சுற்றுவட்டார கிராமங்களைச் சார்ந்த இளைஞர்கள் பெருந்திரளாக 'நினைவு ஜோதி' எடுத்து ஓடி வந்தனர்.  கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.