★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Sunday, January 3, 2021

தமிழக முதல்வர் எடப்பாடி அவர்களுடன் மறத்தமிழர் சேனை நிர்வாகிகள் சந்திப்பு

 

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அனைத்து சமுதாய மக்களின் கருத்துகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்து வருகிறார். அந்தவகையில் முக்குலத்தோர் சமுதாய மக்களின் கோரிக்கைகள் மற்றும் கருத்துகளை நேரில் கேட்பதற்காக 02.012021 அன்று மாலை 06.00 மணியளவில் இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தேவர் மகாலில் கூட்டம் நடைபெற்றது.

              கருத்துகேட்பு கூட்டத்திற்கு மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் தலைமை வகித்தார். அ.இ.அ.தி.மு.க இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி அவர்கள் வரவேற்று பேசினார். இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் மு.மணிகண்டன் அவர்கள் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் நி.சதன் பிரபாகர் அவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

 மறத்தமிழர் சேனை சார்பாக மாநில அமைப்பாளர் சு.புதுமலர் பிரபாகரன், மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆதி முத்துக்குமார பாண்டியன், மாநில இளைஞர் சேனை செயலாளர் சு.மணிகண்டன் தேவர், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் து.தினேஷ், மதுரை மாவட்ட தலைவர் ஆ.பாலமுருகன் தேவர், சென்னை மாவட்ட பொறுப்பாளர் ஸ்டான்லி ராஜபாண்டியன், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் அரியூர் முத்துக்குமார் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நினைவுப் பரிசாக இராமநாதபுரம் அரண்மனை போன்ற வடிவமைப்பை மறத்தமிழர் சேனை சார்பாக வழங்கினர். மாநில அமைப்பாளர் அவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்று கோரிக்கை மனுவை வழங்கினார்.

Monday, June 25, 2018

சசிவர்ண முத்துவடுகநாதப் பெரிய உடையாத் தேவர் 246 வது வீரவணக்க நாள் விழா


சிவகங்கை சீமையின் இரண்டாவது மன்னர் சசிவர்ண முத்துவடுகநாதப் பெரிய உடையாத் தேவர் மற்றும் இளைய ராணி கெளரி நாச்சியார் ஆகியோரின் 246 வது நினைவு நாள் மற்றும் வீரவணக்க நாள் விழா 25.06.2018 அன்று காளையார்கோவில் மன்னர் மாலையீட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

மாமன்னர் சசிவர்ண முத்துவடுக நாதத் தேவர் அவர்களது வீரத்தையும்; போர் திறனையும் புதிய தலைமுறையினர்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மறத்தமிழர் சேனை இயக்கம் தொடர்ந்து களப்பணி ஆற்றி வருகிறது. மறத்தமிழர் சேனை மதுரை மாவட்ட நிர்வாகிகளின் சிறந்த செயல்பாட்டால் நான்கு மாதங்களுக்கு முன்பே சுவர் விளம்பரங்கள் மதுரை நகர் பகுதிகளுக்குள் எழுதப்பட்டிருந்தன. அதேபோல 246 வது நினைவு நாளை முன்னிட்டு தேனி, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளால் சுவரொட்டிகள் அச்சடிக்கப்பட்டு ஒட்டப்பட்டு இருந்தன. காளையார்கோவில் நகருக்குள் வருவதற்கான அனைத்து சாலைகளிலும் இளையான்குடி ஒன்றிய நிர்வாகிகள் திட்டமிட்டு அனைத்து மாவட்டங்களின் சுவரொட்டிகளையும் ஒட்டி பெருங்கவனத்தை ஏற்படுத்தியிருந்தனர்.


சிவகங்கை சீமை மாமன்னர் முத்துவடுகநாதத் தேவர் அவர்களின் 246 வது நினைவு நாளை முன்னிட்டு அஞ்சலி செலுத்துவதற்காக சிவகங்கை சீமை வருகைதந்த மாநில, மாவட்ட மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகிகளை கொல்லங்குடி காளி கோவில் வளைவு அருகில் காளையார்கோவில், இளையான்குடி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். நாற்பதுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் மறத்தமிழர் சேனை கொடி ஏந்தி தொண்டர்கள் முன் செல்ல வாகனப்பேரணியாக காளையார்கோவில் வந்தடைந்தனர். வீரப்பேரரசர் முத்துவடுகநாதத்தேவர் அறக்கட்டளை சார்பில் கோபால்துரை அவர்களும் சகா.மணிமுத்து அவர்களும் மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை மேளதாளம் இசைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.


மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்களது தலைமையில் ஆலோசகர் வீ.கா.இராமசாமித்தேவர் அவர்கள், மாநில துணை பொதுச் செயலாளர் மு.முத்துக்குமார் அவர்கள், மதுரை மாவட்ட செயலாளர் து.தினேஷ் அவர்கள், மதுரை மாவட்ட தலைவர் மணிகண்டன் அவர்கள், மதுரை மாவட்ட பொருளாளர் திருப்பதி அவர்கள், மதுரை மாவட்ட இளைஞர் சேனை செயலாளர் கி.உலகநாதன் அவர்கள், மதுரை தெற்கு தொகுதி இளைஞர் சேனை செயலாளர் பூ.வாலகிருஷ்ணன் அவர்கள், மதுரை மத்திய தொகுதி இளைஞர் சேனை செயலாளர் பா.சதீஸ்குமார் அவர்கள், போடி ஒன்றிய பொறுப்பாளர் பால்பாண்டி அவர்கள், தேனி மாவட்ட இளைஞர் சேனை செயலாளர் அருள்ராஜ் அவர்கள், பரமக்குடி ஒன்றிய செயலாளர் வ.முருகன் அவர்கள்,  பி.பி.குளம் கிளை செயலாளர் ர.கார்த்திக் அவர்கள், சிம்மக்கல் பகுதி சேனை பொறுப்பாளர்கள் ச.மனோஜ்குமார் அவர்கள், காளிபிரகாஷ் அவர்கள், பழங்காநத்தம் பகுதி இளைஞர் சேனை நிர்வாகி விவேக் அவர்கள், சிவகங்கை மாவட்ட இளைஞர் சேனை செயலாளர் அரவிந்த் அவர்கள், சிவகங்கை மாவட்ட மாணவர் சேனை செயலாளர் மா.வசந்த் அவர்கள், இளையான்குடி ஒன்றிய தலைவர் நா.திருமுருகன் அவர்கள், இளையான்குடி ஒன்றிய தகவல் தொழில்நுட்ப சேனை செயலாளர் தடியச்சாமி அவர்கள், இளையான்குடி ஒன்றிய துணை தகவல் தொழில்நுட்ப சேனை செயலாளர் ச.முருகானந்தம் அவர்கள் மற்றும் முரளி தேவன், வழக்கறிஞர் அடைக்கலம், ரகுவீர பாண்டியன், கஜேந்திரபாண்டியன்  உள்ளிட்ட பெருந்திரளான நிர்வாகிகள், உறுப்பினர்கள் மாமன்னர் முத்துவடுகநாத தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.


இளைய ராணி கெளரி நாச்சியார் நினைவிடத்திலும், காளையார்கோவில் ஆலத்தியத்திற்குள் இருக்கும் முத்துவடுகநாதத் தேவர் சிலைக்கும் மாலை அணிவித்து புகழ்வணக்க முழக்கம் எழுப்பப்பட்டது. மாநில அமைப்பாளர் சு.புதுமலர் பிரபாகரன் அவர்களுக்கு அறக்கட்டளை மூத்த நிர்வாகி உருவாட்டி பொன்னுசாமித்தேவர் அவர்கள் விழாக்குழுவின் சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Wednesday, June 20, 2018

மாமன்னர் முத்துவடுகநாததேவர் 246 வது வீரவணக்க நாள் விழா - சிவகங்கை மாவட்டம்


மாமன்னர் முத்துவடுகநாததேவர் 246 வது வீரவணக்க நாள் விழா - தேனி மாவட்டம்


மாமன்னர் முத்துவடுகநாததேவர் 246 வது வீரவணக்க நாள் விழா


சிவகங்கை சீமையின் இரண்டாவது மன்னர் சசிவர்ண முத்துவடுகநாதப் பெரிய உடையாத் தேவர் மற்றும் இளைய ராணி கெளரி நாச்சியார் ஆகியோரின் 246 வது நினைவு நாள் மற்றும் வீரவணக்க நாள் விழா ஜூன் - 25 - 2018 அன்று காளையார்கோவில் மன்னர் மாலையீட்டில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

மாமன்னர் சசிவர்ண முத்துவடுகநாதத் தேவரின் வீரத்தையும்; போர் திறனையும் புதிய தலைமுறையினர்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மறத்தமிழர் சேனை இயக்கம் களப்பணி ஆற்றி வருகிறது. குறிப்பாக, ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி, பொன்.பாண்டித்துரை தேவர், வேலு நாச்சியார், கீழத்தூவல் தியாகிகள் ஐவர், மன்னர் பாஸ்கர சேதுபதி, மாமன்னர் பூலித்தேவர் போன்ற மாபெரும் சமூக ஆளுமைகள் குறித்த விவாதங்களை கிளப்பி வெகுஜன கவனிப்பை ஏற்படுத்தியிருக்கிறோம்.

அதே சம முக்கியத்துவத்தோடு கடந்த சில வருடங்களாக திட்டமிட்டு உழைத்து வருகிறோம். சிவகங்கை சீமை அரசாண்ட மாமன்னர் சசிவர்ண முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர் அவர்கள் குறித்த விவாதத்தை கிளப்பும் நோக்கில் சுவர் விளம்பரங்கள் மறத்தமிழர் சேனை மதுரை மாவட்ட நிர்வாகிகளின் சிறந்த செயல்பாட்டால் நடைபெற்றது. தற்பொழுது 246 வது நினைவு நாளை முன்னிட்டு தேனி, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளால் சுவரொட்டிகள் அச்சடிக்கப்பட்டு ஒட்டப்பட்டு உள்ளன. அவற்றில் வெகுமக்கள் கவனம் ஈர்த்த சிலவற்றை காணலாம்.


Friday, April 13, 2018

வைகை நதி மக்கள் இயக்கம் கண்டன ஆர்ப்பாட்டம்


வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் வைகையாற்றில் கழிவு நீர் கலப்பதை கண்டித்தும், நிலத்தடி நீரை பாதுகாக்க வலியுறுத்தியும் 07.04.2018 அன்று மாலை 05.00 மணியளவில் மதுரை பேச்சியம்மன் படித்துரை ஆறுமுகசந்தி திலகர் திடல் சந்தை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வைகை நதி மக்கள் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எம்.ராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் சு.புதுமலர் பிரபாகரன், மாநில துணை பொதுச்செயலாளர் மு.முத்துக்குமார், மதுரை மாவட்ட தலைவர் சு.மணிகண்ட தேவர், மதுரை மாவட்ட ஆலோசகர் அ.கி.கணேசத்தேவர், மதசார்பற்ற ஜனதாதளம் மாநில பொதுச்செயலாளர் க.ஜான்மோசஸ், மக்கள் சட்ட உரிமை இயக்கம் தலைவர் ப.அண்ணாதுரை, நவீன நீர்வழிச்சாலை தலைவர் ஏ.சி.காமராஜ், வைகை டிரஸ்ட் நிறுவனர் அண்ணாதுரை, இந்து இளைஞர் சேனா மாநில தலைவர் எம்.சோலைக்கண்ணன், இந்து இளைஞர் சேனா மாநில அமைப்பாளர் கே.ரவிக்குமார், நம்மாழ்வார் சமூக சேவை அறக்கட்டளை நிறுவனர் கே.ஆர்.சித்தன், இயற்கை ஆர்வலர் வழக்கறிஞர் இ.த.சீமான் மற்றும் பல்வேறு இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

முன்னதாக மதுரை கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர் இல.அமுதன் வரவேற்புரை ஆற்றிட வைகை நதி மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் எம்.மணிகண்டன் நன்றியுரை ஆற்றினார்.

Thursday, April 12, 2018

mukkulathor logo

mukkulathor logo / moovendar logo / kallar / maravar / agamudayar / maruthu pandiyar / thevar

Saturday, March 31, 2018

ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி 258 வது பிறந்த நாள் விழா


இராமநாதபுரம் சீமை அரசாண்ட மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் 258 வது பிறந்த நாள் விழா அரசு விழாவாக ஆண்டுதோறும் மார்ச் -30 அன்று நடத்தப்பட்டு வருகிறது. ஆங்கிலேய ஆட்சியாளர்களின் அத்துமீறல்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மாமறவர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் பிறந்த நாளை மதுரை மாவட்ட மறத்தமிழர் சேனை வெகு விமரிசையாக கொண்டாடியது.

மதுரை மாவட்ட செயலாளர் து.தினேஷ் அவர்களின் தலைமையில் 30.03.2018 அன்று மதுரையில் நடைபெற்ற விழாவிற்கு மாநில துணை பொதுச்செயலாளர் மு.முத்துக்குமார் அவர்களும் மாநில துணை பொருளாளர் சுவ.அருணாச்சலம் அவர்களும் முன்னிலை வகித்தனர். மதுரை மாவட்ட தலைவர் சு.மணிகண்டத் தேவர் வரவேற்புரை ஆற்றிட மதுரை மாவட்ட பொருளாளர் பெ.திருப்பதி தேவர் இறுதியில் நன்றியுரை ஆற்றினார்.

மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் சு.புதுமலர் பிரபாகரன் அவர்கள் கலந்து கொண்டு மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மற்றும் மதுரை மாவட்ட இளைஞர் சேனை செயலாளர் கி.உலகநாதன், பழங்காநத்தம் பகுதி இளைஞர் சேனை செயலாளர் இரா.அருள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு மாமன்னரின் படத்திற்கு மரியாதை செலுத்தினார்கள்.

Friday, March 16, 2018

மேட்டுநீரேத்தான் தேவர் சிலை பிரச்சனை - வட்டாட்சியர் சந்திப்பு


மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், மேட்டு நீரேத்தான் கிராமத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு கிராம பொதுமக்கள் அனைவரும் இணைந்து தெய்வீகத்திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு தனியாருக்கு சொந்தமான பட்டா இடத்தில் ஆலயம் அமைத்தனர். திறந்த வெளியில் இல்லாமல் கோவிலாக கட்டிடத்தை எழுப்பி தேவர் திருமகனாருக்கு சிலை வைத்தனர்.

ஜெயலலிதாவிற்கும், எம்.ஜி.ஆர்க்கும் திடீர் திடீரென சிலை திறந்து வரும் தமிழக அரசு தேவர் திருமகனாருக்கு சிலை திறப்பதை மட்டும் தடுக்கும் நோக்கத்தோடு இருப்பது போல, காவல்துறையின் மூலம் கோவில் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தியதோடு, சிலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வந்த மரியாதைக்குரிய சகோதரர் எம்.கே.கணேசன் அவர்களின் மீது சோழவந்தான் காவல் நிலைய குற்ற எண்.327/2016 இன் கீழ் வழக்கு பதிவு செய்தது. இதன் காரணமாக நீண்ட நாட்களாக தேவர் சிலை திறக்கப்படாமலும், கட்டிடப்பணிகளும் முழுமையாக நடைபெறாமல் இருந்து வந்தன.

மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் 19.01.2018 அன்று மேட்டுநீரேத்தான் கிராமத்திற்கு இயக்க நிர்வாகிகளோடு நேரில் சென்று சிலை அமைப்பு குழுவினர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து சிலை அமைக்கும் பணிக்கு அரசு தவறுதலாக ஏற்படுத்தி வரும் தடங்களுக்கு எதிராக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை விரைந்து பணியாற்ற உத்தரவிட்டிருந்தார். மறத்தமிழர் சேனை சார்பில் கட்டிட பணிகளை மீண்டும் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 15.03.2018 அன்று வாடிப்பட்டி வட்டாட்சியர் பார்த்திபன் அவர்கள் தலைமையில் சிலை அமைப்பது குறித்த பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்தில் மாநில துணைப் பொதுச்செயலாளர் மு.முத்துக்குமார், மதுரை மாவட்ட செயலாளர் து.தினேஷ், மதுரை மாவட்ட தலைவர் மணிகண்டன், மதுரை மாவட்ட பொருளாளர் பெ.திருப்பதி தேவர், மேட்டுநீரேத்தான் எம்.கே.கணேசத்தேவர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Saturday, January 13, 2018

தை பொங்கல் திருநாள் வாழ்த்து அறிக்கை

தமிழரின், தமிழின் பண்பாட்டு அடையாளங்களை காத்து, உலகளாவிய அளவில் தமிழ் நிலத்தின் புகழை பரவல் செய்து கொண்டிருக்கும் தமிழ்ச்சாதி தமிழர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

உலக அரங்கில் அனைத்துக்கும் காரணம் அமைத்து கடைபிடித்த ஒரே இனமாகிய தமிழர்கள் நாம் என்பதும், அதனின் தலையாய இனக்குழுக்கள் யாம் என்பதும் பிறப்பின் மகிழ்வை ஒவ்வொரு நாளும் உணர்த்திச் செல்கிறது. இயற்கையோடு இணைந்து வாழ்வதே மனித வாழ்க்கையின் நியதி. அந்த இயற்கைக்கும், தம்மோடு தோழமையாக நின்று மண்ணை பண்படுத்தி பயனடைய உழைத்த காளைகளுக்கும் நன்றி செலுத்தும் திருநாளாக அமைவதே தை பொங்கல் திருநாள் ஆகும். உலகத்தமிழர்கள் அனைவரும் ஒற்றைக்கருத்தோடு நின்று மகிழும் பொங்கல் திருநாளில் மறத்தமிழர் சேனை குடும்பத்தின் சார்பில் வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்கிறது நன்னூல் நூற்பா அதன்படி, தமிழர்கள் அனைவரும் காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதைக்கு உதவாத பழைய சிந்தனை தடைவாதங்களை தவிர்த்துவிட்டு இன்றைய நவீன உலகியலுக்கு உகந்த கருத்தாக்கங்களோடு முன்னோர் கடைபிடித்த, பாதுகாத்த பண்பாட்டு அடையாளங்களோடு வீரியத்தோடு களம் அமைக்க; போராட வேண்டிய நேரமிது.

Monday, November 20, 2017

தமிழ்நாடு அரசுப்பணி தேர்வாணையம் தமிழர்களுக்கு இழைக்கும் துரோகம்

தமிழக அரசியல் களம், ஆட்சி அதிகாரம், வர்த்தகம், கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அடகு தொழில்  என வெளி மாநிலத்தவர்களின் கோரப்பிடிக்குள் தமிழகம் சிக்கித்திணறி வருகிற இன்றைய சூழல்களில் மேலும் தமிழர்களின் வாழ்வியலை முடக்கும் விதமாக தமிழ்நாடு அரசுப்பணி தேர்வாணையம் வெளி மாநிலத்தவர்களுக்கு அரசுப்பணிகளை திறந்து விட்டிருக்கிறது. பணியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ் தேர்வில் வென்றால் போதும் என்கிறது.

தமிழகம் தவிர்த்த மற்ற மாநில அரசுகள் அனைத்தும் மொழிவழி தேசிய கருத்தியலோடு தனது இனம், தனது மொழி, தனது மக்கள், தனது நாடு என மிகச் சரியாக செயல்படுவதோடு, தமது மாநில எல்லைகளுக்குள் இருக்கக்கூடிய மத்திய, மாநில அரசுகளின் வேலைகளோடு தனியார் துறைகளின் வேலைவாய்ப்புகளிலும் மண்ணின் மைந்தர்களுக்கே முக்கியத்துவம் அளித்து வருகின்றன. மீதமாகி கடலிலே கலந்துகொண்டிருக்கும் நீரைக்கூட தருவதற்கு தயாராக இல்லை.

இத்தகைய சூழலில், தமிழகம் மாற்று மொழியினர்களின் வேட்டைக்காடாக தொடர்ந்து நீடித்து வருவதும், தமிழர்களுக்கு அரசுப்பணி வழங்க வேண்டிய தேர்வாணையமே உடன்போவதும் கண்டனத்துக்குரியதாகும். ஏழை எளிய மக்களை எல்லாவற்றிற்கும் வங்கிகளுக்கு இழுக்கும் நிலையில், படிப்பறிவு இல்லாத பாமர மக்களுக்கு சேவை செய்வதற்கென்றே தேசிய வங்கிகளில் தமிழறியாத அலுவலர்களின் கூட்டம் நிரம்பி வழிவதும், ஆட்சிப்பணி, காவல்பணி போன்ற உயர்பதவிகளில் மாற்று மொழியினர்கள் அதிகரித்து வருவதும் கண்டு வருகிறோம். எஞ்சி மிஞ்சி நிற்கும் ஒன்றிரண்டு அரசுப்பணிகளுக்கும் ஓட்டுமொத்த தமிழ்ச் சாதியினர்களும் போராடி வருகின்றனர். இந்நிலையில், இதுபோன்ற அறிவிப்புகளால் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் அரசுப்பணி என்பது பெருங்கனவாய் ஆக்கப்பட்டிருக்கிறது.


தமிழர்களுக்கு பெருங்கேடு விளைவிக்கவிருக்கும் இந்த அறிவிப்பினை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென தமிழ்நாடு அரசுப்பணி தேர்வாணையத்தை மறத்தமிழர் சேனை சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

சங்கரபதி கோட்டை வரலாற்று மீட்பில் - அரசின் மெத்தனம்

சிவகங்கை மாவட்டம் கரைக்குடியில் இருந்து தேவகோட்டை நோக்கி செல்லும் வழியில் முட்புதர்களுக்குள் சிதைந்தபடி கம்பீரமாக காட்சியளிக்கிறது சங்கரபதி கோட்டை. இப்போது ஆள் நடமாட்டமின்றி குடிமகன்களின் புகலிடமாக இருந்துவரக் கூடிய இக்கோட்டையானது, பல வரலாற்று வீரம் மிகுந்த நிகழ்வுகளுக்கு சாட்சியாக நின்றுகொண்டிருப்பதை நாம் மறந்துவிட இயலாது.

பதினாராம் நூற்றாண்டைச் சார்ந்த இக்கோட்டை மதுரை திருமலை நாயக்கர் மகாலைப் போன்ற அளவில் பெரிய தூண்களையும், கட்டிட அமைப்பையும் கொண்டதாகும். கட்டிடம் மற்றும் தூண்கள் சுடாத செங்கற்கல், கருப்பட்டி, கடுக்காய் மற்றும் முட்டையின் வெள்ளை கருவை கலந்து கட்டப்பட்டுள்ளன. சுமார் ஐம்பது ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கோட்டைக்குள் குளம்போல பெரிய பள்ளம் வெட்டப்பட்டு அதற்குள் போர்ப்பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

இராமநாதபுரம் மன்னர் சேதுபதிக்கு தொண்டியை சார்ந்த இஸ்லாமியர் ஒருவர் இருநூறு குதிரைகளைப் பரிசாகக் கொடுத்துள்ளார். அந்த குதிரைகளை தமது படைப்பிரிவில் இணைத்து பராமரிக்க; பயிற்சி அளிக்க திறமையான ஆள் தேடினார் சேதுபதி மன்னர். குதிரைகளை பராமரிக்க ஹைதர் அலி தமது தளபதிகளில் ஒருவரான சங்கரபதியை அனுப்பி வைத்துள்ளார். அவரது நினைவாகவே அக்கோட்டையானது சங்கரபதிகோட்டை என வழங்கலாயிற்று.

மன்னர் சேதுபதி தன்னுடைய மகளான, வரலாற்று நாயகி வேலுநாச்சியார் அவர்களை சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதத் தேவர் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தபொழுது சீதனமாக சங்கரபதிக் கோட்டையை வழங்கினார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக திரண்ட சிவகங்கை வீரர்களுக்கு மருது சகோதரர்கள் இக்கோட்டையில் தான் வாள் பயிற்சி அளித்து வந்துள்ளனர். பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் கெட்டிபொம்மு நாயக்கரின் சகோதரர் ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுக்க இவ்விடத்தை பயன்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க சங்கரபதிக்கோட்டை தற்போது சிதிலமடைந்து இடியும் தருவாயில் இருந்து வருகிறது. இக்கோட்டையை அரசு சீரமைத்து, சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டுமென பலதரப்பட்ட மக்களும் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் அவர்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களிடம் கோரிக்கை வைத்தார். சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் 110 விதியின் கீழ் சங்கரபதி கோட்டையை சீரமைப்பு செய்திடவும், சுற்றுலாத்தலமாக அறிவிக்கவும் அரசாணை வெளியிட்டு நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு செய்தார்.

இந்நிலையில் நான்காண்டுகளைக் கடந்தும் சங்கரபதி கோட்டை சீரமைக்கப்படாமல் முட்செடிகளுக்குள் முழுமையாக அழியும் நிலையிலேயே இருந்து வருகிறது. தற்போது அறிவிப்பினை வெளியிட்ட ஜெயலலிதா அவர்களும் மறைந்து விட்டார். மேலும், காலம் தாழ்த்தாமல் அறிவிக்கப்பட்ட நிதியினை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் சு.புதுமலர் பிரபாகரன் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இருந்து தேவகோட்டை செல்லும் வழியில் முட்புதர்களால் மறைக்கப்பெற்று, பராமரிப்பின்றி அழியும் நிலையில் சங்கரபதிக் கோட்டை இருந்து வருகிறது. இந்த கோட்டையானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இந்த கோட்டையானது 16-ஆம் நூற்றாண்டை சார்ந்ததாகும். மதுரை திருமலை நாயக்கர் மகாலைப் போன்ற தூண்களோடு கட்டிட கலையின் அடையாளமாகவும் இருந்து வருகிறது. சேதுபதி மற்றும் சிவகங்கை ஆட்சியாளர்களின் கீழ் போர்ப்பயிற்சி மேற்கொள்ளும் இடமாகவும், ஆயுத கிடங்காவும் இருந்து வந்திருக்கிறது. மருதுசகோதரர்கள் சிவகங்கை படை வீரர்களுக்கு போர்பயிற்சி அளித்துவந்ததுடன், ஊமைத்துரைக்கு அடைக்கலமும் கொடுத்த மிகப்பெரிய அரணாகும்.

தற்போது, சங்கரபதிக்கோட்டையானது முற்றிலும் அழிந்து போகும் நிலையில் இருந்து வருகிறது. தேவர் சமூகத்தை சார்ந்தவர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் இந்த கோட்டையை சீரமைக்க வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறார்கள். மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களிடம் அப்போதைய மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் அவர்கள் இந்த கோட்டையை சீரமைக்க கோரிக்கை விடுத்தார்.

14.05.013 அன்று தமிழக சட்டமன்றத்தில் மாண்புமிகு முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் 110 விதியின் கீழ் சங்கரபதிக் கோட்டையை சீரமைக்க மூன்று கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாகவும், சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்படும் எனவும் அறிவிப்பு செய்து ஆணை பிறப்பித்தார். இந்நிலையில் தற்போது வரை வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோட்டையானது சீரமைக்கப்படாமல் சிதைந்துகொண்டே வருகிறது.

ஆகவே, தாங்கள் இதனை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்ட நிதியினை உடனே ஒதுக்கீடு செய்து கோட்டையை புனரமைப்பு செய்திடவும், சுற்றுலாத்தலமாக அறிவிப்பு செய்துடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அன்புடன் கோருகிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tuesday, September 19, 2017

நிலத்தடி நீர் பாதுகாப்பு போராளிகள் கைது

ஸ்ரீவைகுண்டம், செப்-18-017. விவசாயத்திற்கும் குடிநீருக்கும் மக்கள் திண்டாடி வரும் சூழலில் பணமுதலைகளின் தொழிற்சாலைகளுக்கு கட்டுப்பாடின்றி நிலத்தடி நீரை எடுத்துக்கொள்ள அனுமதித்து, ஆடு மாடுகளுக்கு கூட நீர் இல்லாதபடி விற்பனை செய்வதைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆடு, மாடு, கோழிகளுடன் குடிபுகும் போராட்டத்தை அறிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் புதுக்குடி இராஜா தலைமையில் 18-09-17 அன்று ஸ்ரீவைகுண்டம் நகரில் இருந்து தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். காவல்துறை அனுமதி மறுத்துவிட காவல்துறையையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மறத்தமிழர் சேனை துணைப் பொதுச்செயலாளர் மு.முத்துக்குமார பாண்டியன், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், பச்சை தமிழன் இயக்க மாநில தலைவர் சுப.உதயகுமார், விவசாய சங்கத் தலைவர் அலங்காரம், பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா மாவட்டத் தலைவர் பாகல் சமீர், ஆம் ஆத்மி கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குணசீலன், பசும்பொன் ரத்ததான கழக மாவட்ட செயலாளர் சுப்பையா, மக்கள் தேசிய தீ கட்சி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், நாம் உழவர் பாதுகாப்பு அணி பொதுச்செயலாளர் மாணிக்கசாமி, மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் மாநில அமைப்பாளர் இசக்கிமுத்து, திராவிட தேசம் கட்சி மாநில துணைப் பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பல்வேறு இயக்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.


முன்னதாக, நிலத்தடி நீர் திருட்டுக்கு எதிராக கண்டன குரல் எழுப்பியபடி பத்துக்கும் மேற்பட்ட நாய், ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுடன் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக செல்ல போராட்டக்காரர்கள் முயன்றனர். அப்போது அனுமதியின்றி ஊர்வலமாக செல்வதாக கூறி துணை கண்காணிப்பாளர் திபு தலைமையில் காவல் ஆய்வாளர் வெங்கடேசன், சார்பு – ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட காவல்துறையினர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்ட 165 பேரை கைது செய்தனர்.

போராட்டம் குறித்து நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் புதுக்குடி ராஜா செய்தியாளர்களிடம் பேசும் போது “தாமிரபரணி ஆற்றின் நீர்வரத்தைக் கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கார், பிசானம், முன்கார் என மூன்று போக சாகுபடிகள் இருந்த நிலைமாறி தற்போது ஒரு போக விவசாயத்திற்கு கூட தண்ணீரை பெற முடியாத அவல நிலையில் விவசாயிகள் போராடி வருகின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் காலி குடங்களுடன் பல மைல் தூரம் நடந்து சென்று தண்ணீருக்காக காத்திருக்கும் நிலையும், குடிநீருக்காக போராட்டம் நடத்துவதும் அதிகரித்து வருகிறது.


இந்நிலையில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்குவதற்காக நடைபெற்று வரும் நிலத்தடி நீர் திருட்டை நிரந்தரமாக தடுக்க எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காத மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து பலமுறை மனு அளித்துப் பார்த்தோம். போராட்டங்களும் செய்து பார்த்து விட்டோம். இதனைத் தொடர்ந்தே கால்நடைகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் குடிபுகும் முடிவிற்கு வந்தோம். தற்போது காவல்துறை திருட்டை தடுக்காமல் எங்களை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும். எங்கள் மீது போராட்டத்தில் கலந்து கொண்ட தோழமை இயக்கத்தினர்கள் மீதும் வழக்கு போட்டிருக்கின்றனர். ஆயினும் எங்கள் போராட்டம் தொடரும்” என்று கூறினார்.

Thursday, September 14, 2017

60 ஆம் ஆண்டு கீழத்தூவல் தியாகிகள் ஐவர் வீரவணக்க கூட்டம் மறத்தமிழர் சேனை சார்பில் நடைபெற்றது.

பரமக்குடி, செப்.14, பரமக்குடியில் கீழத்தூவல் தியாகிகள் ஐவர் வீரவணக்க அறுபதாம் ஆண்டு நாளை முன்னிட்டு மறத்தமிழர் சேனை சார்பில் பரமக்குடி தேவர் மகாலில் கீழத்தூவல் தியாகிகள் ஐவரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் சு.புதுமலர் பிரபாகரன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், ஐவர் நினைவு நாளை அரசு விழாவாக அறிவித்து மணிமண்டபம் அமைக்க வேண்டும். 60 ஆண்டுகளுக்கு முன்பு சுட்டுக்கொல்லப்பட்ட தியாகிகளின் உடல்குறித்த உண்மை நிலையை அறிந்து கொள்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். வறுமையில் வாடும் வாரிசுதாரர்களுக்கு இழப்பீடும், தகுதிக்கு ஏற்ப அரசுப்பணியும் வழங்கிட வேண்டும். பரமக்குடி வைகை ஆற்றை தூய்மைப்படுத்தி குடிநீர் திருட்டை தடுத்திட வேண்டும். வைகை ஆற்றில் கட்டிட, குப்பை கழிவுகளை கொட்டுகிறவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் முக்குலத்தோர் புலிப்படை பொதுச்செயலாளர் பாண்டித்துரை தேவர், மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில அமைப்புச் செயலாளர் சி.எம்.டி.ராஜா, மறத்தமிழர் சேனை மாநில துணைப்பொதுச் செயலாளர் முத்துக்குமார பாண்டியன், அகில இந்திய பார்வர்ட் பிளாக் இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் நவநீதன், மறத்தமிழர் சேனை இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் உமா மகேஸ்வரன், வைகை பாசன விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மதுரைவீரன் ஆகியோர் படத்திற்கு மாலை அணிவித்து சிறப்புரை ஆற்றினர்.

கூட்டத்தில், முக்குலத்தோர் புலிப்படை மாநில மாணவர் அணிச் செயலாளர் வழக்கறிஞர் சுரேஷ் தேவன், தேசிய முக்குலத்தோர் கழகம் மாநில பொதுச்செயலாளர் மனோஜ்பாண்டியன், மூமுக மாவட்ட செயலாளர் வீ.எம்.சேகர், அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாணவர் அணி செயலாளர் அடைக்கலம், அதிமுக நகர் மீனவரணி துணை தலைவர் இராமகிருஷ்ணன், வழக்கறிஞர்கள் கார்த்திக்சேதுபதி, துரைப்பாண்டியன், பசும்பொன் தேசிய கழகம் சிவகங்கை தெற்கு மாவட்ட செயலாளர் ஜெய.பாரதி தேவர், வெள்ளைச்சாமி தேவர் பாசறை சிவகங்கை வடக்கு மாவட்ட கொள்கைபரப்பு செயலாளர் பெரியமந்திரி ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக மறத்தமிழர் சேனை பரமக்குடி ஒன்றிய செயலாளர் முருகன் நன்றி கூறினார்.

Sunday, September 10, 2017

கீழத்தூவல் படுகொலை

கீழத்தூவல் துப்பாக்கி சூடு மாமறவர்கள் ஐவர் வீரவணக்க நாள் நிகழ்வில் மறத்தமிழர் சேனை பங்களிப்புகள்



Thursday, August 3, 2017

எது அரசியல் ?


ரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒவ்வொரு நிகழ்வும் அது நிகழும் காலத்தில் இயல்பாக நடந்தது போலத்தான் தோன்றும். ஆனால், அது இயல்பானதல்ல. ஒவ்வொரு நிகழ்வும் ஒன்றோடொன்று தொடர்பாக எதையோ நோக்கி நகர்ந்து கொண்டுதானிருக்கும். அதுபோலவே,  உலகமெங்கும் கடல் பரந்து விரிந்து கிடக்கிறது என்றாலும், எங்கள் சேது நாட்டு கடலுக்கென்று தனிச்சிறப்பு உண்டு. கிடைப்பதற்கு அரிதான முத்து எங்கள் சேதுசீமையின் கடல்பரப்பில் கொட்டிக்கிடக்கிறது. அதைப்போல, உலகமெங்கும் இராமனை கடவுளாக வணங்கி வந்தாலும், அந்த இராமனே வணங்கிய லிங்கமாகிய இராமலிங்கம் எங்கள் நாட்டின் புண்ணியபூமியான இராமேஸ்வரத்தில் அமைந்திருக்கிறது.  கிடைப்பதற்கரிதான முத்தும் இராமனே வணங்கிய இராமலிங்கமும் இணைந்து முத்துராமலிங்கம் ஆக தேவர் குலத்திலே ஓர் மகனாக பிறப்பெடுக்க வைத்திருக்கிறது.

பசும்பொன் கிராமத்தில் பாண்டியர் மரபிலே மாசற்ற தங்கமென உதித்த துருவநட்சத்திரம் தான் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார். தேவர் திருமகனார் அவர்களுடைய வாழ்வியல் முறையென்பது முற்றிலும் அறம் சார்ந்தது. ஆட்சியாளர்களின் அதிகார பலமோ, அதையும் மீறிய பணமோ ஒருபோதும் தேவரை சமரசம் கொண்டுவிடச்செய்ய இயலாத வகையில் யாவற்றிலும் முக்தி பெற்றவராயிருந்தார்.

எந்த நிலையிலும் முறைதவறி விடாமல், ஏழை எளிய மக்களின் வாழக்கைத்தரம் உயர்வதற்கென தமது அரசியலை கட்டமைத்துக் கொண்டார். அதன் காரணமாகவே இன்றளவும் அரசியல்வாதிகள் அனைவரும் தங்களது பேச்சுகளில் தேவரின் வாழ்வை; வாக்கை மேற்கோள்களாக காட்டி வருகிறார்கள்.

மறத்தமிழர் சேனை

மறத்தமிழர் சேனை
12/338, திருவரங்கம் சாலை,
நேதாஜி நகர், பரமக்குடி 

maraththamizhar senai

maraththamizhar senai - மறத்தமிழர் சேனை
12/338, thiruvarangam salai,
nethaji nagar, paramakudi.

Friday, January 6, 2017

தூரி எம்.ஆர். இராமசாமித் தேவர் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க கோரி மீண்டும் கடிதம்

மறைந்த மாபெரும் தியாகியும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் உற்ற நண்பருமாகிய முதுகுளத்தூர் தூரி கிராமத்தைச் சார்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் எம்.ஆர்.இராமசாமித்தேவர் அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்திடவும், அவரது பிறந்த நாளில் அரசு விழா எடுத்திடவும் வலியுறுத்தி தமிழக முதலைச்சரின் தனிப்பிரிவில் மறத்தமிழர் சேனை சார்பாக மனு அளிக்கப்பட்டிருந்தது. அந்த மனு குறித்து பரிசீலிக்கும்படி இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்திடம் முதல்வர் அலுவலகம் கோரியிருந்த நிலையில், இராமநாதபுரம், (ஊராட்சிகள்) உதவி இயக்குநர் திரு ஆ.செல்லத்துரை அவர்கள் 28.12.16 அன்று மாநில அமைப்பாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதனை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி, மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் இன்று (06.01.2017) இராமநாதபுரம் ஆட்சித்தலைவர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் “இந்திய நாடு ஆங்கிலேயர்களின் மேலாதிக்கத்திற்கு கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த பொழுது சுதந்திர உணர்வோடு போராடி – விடுதலை அடைந்திட பல போராட்டங்களையும், உயிர்த் தியாகங்களையும் அதிகஅளவில் நடத்தியதோடு, சிறை வாழ்வையும் முழு மனதோடு ஏற்றுக் கொண்டவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். அந்தவகையில் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், மு.தூரி கிராமத்தைச் சார்ந்த எம்.ஆர்.இராமசாமித்தேவர் அவர்கள் இந்திய சுதந்திர உணர்வோடு பலமுறை ஆங்கிலேயர்களுக்கு எதிராக செயல்பட்டு சிறை சென்று இருந்துள்ளார்.

Friday, December 30, 2016

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு மறத்தமிழர் சேனை கடிதம்

அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திருமதி ந.சசிகலா அவர்களுக்கு மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் சு.புதுமலர் பிரபாகரன் அவர்கள் இன்று (30-12-2016) கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் தமிழக அரசியல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தருணம் இது. மக்களாட்சி மலர்ந்துவிட்டதாக சொல்லப்பட்ட இத்தனை ஆண்டு காலங்களில் தமிழர்களின் நலன் சார்ந்து இயங்க வேண்டிய அனைத்து தமிழக அரசியல் கட்சிகளின் தலைமைகளும் தமிழர் அல்லாதோர் தலைமைகளில் தான் இருந்திருக்கிறது. முதல்முறையாக நேரடித் தமிழ்ச்சாதியை சார்ந்த தங்களது கைகளில் அதிகவாக்கு செல்வாக்குள்ள; சட்டமன்ற; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய அரசியல் கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பு, அனைத்து அதிமுக தொண்டர்களின் ஒட்டுமொத்த ஆதரவோடு வந்திருப்பது வரவேற்கத்தகுந்த நிகழ்வாகும்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் தமிழகத்தை அரசாட்சி செய்த காமராஜர் அவர்களின் 1954 – 1963 ஆண்டு வரையிலான ஒன்பது ஆண்டுகால தமிழர் ஆட்சியும்கூட இந்திய தலைவர்களின் மேலாதிக்கத்தின் கீழ் தான் நடந்துள்ளது. ஆனால், தற்போது தங்களது மேலான வழிகாட்டுதலின் கீழ் செயல்படவிருக்கும் ஆட்சியானது அனைத்து தமிழ்ச்சாதியினர்களும் தமிழ்த் தேசிய அமைப்பினர்களும் விரும்பிய வகையில் அமைந்திருப்பது எங்களைப் போன்றவர்களுக்கு மிகுந்த மன நிறைவை தருவதாக; எழுச்சி அளிப்பதாக அமைந்திருக்கிறது.