சிவகங்கை சீமையின்
இரண்டாவது மன்னர் சசிவர்ண முத்துவடுகநாதப் பெரிய உடையாத் தேவர் மற்றும் இளைய ராணி
கெளரி நாச்சியார் ஆகியோரின் 246 வது நினைவு நாள் மற்றும் வீரவணக்க நாள் விழா 25.06.2018
அன்று காளையார்கோவில் மன்னர் மாலையீட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மாமன்னர் சசிவர்ண
முத்துவடுக நாதத் தேவர் அவர்களது வீரத்தையும்; போர் திறனையும் புதிய தலைமுறையினர்களுக்கு எடுத்துச் சொல்லும்
விதமாக கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மறத்தமிழர் சேனை இயக்கம் தொடர்ந்து களப்பணி
ஆற்றி வருகிறது. மறத்தமிழர் சேனை மதுரை மாவட்ட நிர்வாகிகளின் சிறந்த செயல்பாட்டால்
நான்கு மாதங்களுக்கு முன்பே சுவர் விளம்பரங்கள் மதுரை நகர் பகுதிகளுக்குள் எழுதப்பட்டிருந்தன.
அதேபோல 246 வது நினைவு நாளை முன்னிட்டு தேனி, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம்,
விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளால் சுவரொட்டிகள் அச்சடிக்கப்பட்டு ஒட்டப்பட்டு
இருந்தன. காளையார்கோவில் நகருக்குள் வருவதற்கான அனைத்து சாலைகளிலும் இளையான்குடி
ஒன்றிய நிர்வாகிகள் திட்டமிட்டு அனைத்து மாவட்டங்களின் சுவரொட்டிகளையும் ஒட்டி
பெருங்கவனத்தை ஏற்படுத்தியிருந்தனர்.
சிவகங்கை சீமை மாமன்னர்
முத்துவடுகநாதத் தேவர் அவர்களின் 246 வது நினைவு நாளை முன்னிட்டு அஞ்சலி
செலுத்துவதற்காக சிவகங்கை சீமை வருகைதந்த மாநில, மாவட்ட மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகிகளை கொல்லங்குடி காளி கோவில் வளைவு
அருகில் காளையார்கோவில், இளையான்குடி நிர்வாகிகள் சிறப்பான
வரவேற்பு அளித்தனர். நாற்பதுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் மறத்தமிழர் சேனை
கொடி ஏந்தி தொண்டர்கள் முன் செல்ல வாகனப்பேரணியாக காளையார்கோவில் வந்தடைந்தனர்.
வீரப்பேரரசர் முத்துவடுகநாதத்தேவர் அறக்கட்டளை சார்பில் கோபால்துரை அவர்களும்
சகா.மணிமுத்து அவர்களும் மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை மேளதாளம் இசைத்து ஊர்வலமாக
அழைத்து வந்தனர்.
மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர்
புதுமலர் பிரபாகரன் அவர்களது தலைமையில் ஆலோசகர் வீ.கா.இராமசாமித்தேவர் அவர்கள், மாநில துணை பொதுச் செயலாளர்
மு.முத்துக்குமார் அவர்கள், மதுரை மாவட்ட செயலாளர் து.தினேஷ்
அவர்கள், மதுரை மாவட்ட தலைவர் மணிகண்டன் அவர்கள், மதுரை மாவட்ட பொருளாளர் திருப்பதி அவர்கள், மதுரை
மாவட்ட இளைஞர் சேனை செயலாளர் கி.உலகநாதன் அவர்கள், மதுரை
தெற்கு தொகுதி இளைஞர் சேனை செயலாளர் பூ.வாலகிருஷ்ணன் அவர்கள், மதுரை மத்திய தொகுதி இளைஞர் சேனை செயலாளர் பா.சதீஸ்குமார் அவர்கள், போடி ஒன்றிய பொறுப்பாளர் பால்பாண்டி அவர்கள், தேனி
மாவட்ட இளைஞர் சேனை செயலாளர் அருள்ராஜ் அவர்கள், பரமக்குடி
ஒன்றிய செயலாளர் வ.முருகன் அவர்கள், பி.பி.குளம் கிளை செயலாளர் ர.கார்த்திக்
அவர்கள், சிம்மக்கல் பகுதி சேனை பொறுப்பாளர்கள்
ச.மனோஜ்குமார் அவர்கள், காளிபிரகாஷ் அவர்கள், பழங்காநத்தம் பகுதி இளைஞர் சேனை நிர்வாகி விவேக் அவர்கள், சிவகங்கை மாவட்ட இளைஞர் சேனை செயலாளர் அரவிந்த் அவர்கள், சிவகங்கை மாவட்ட மாணவர் சேனை செயலாளர் மா.வசந்த் அவர்கள், இளையான்குடி ஒன்றிய தலைவர் நா.திருமுருகன் அவர்கள்,
இளையான்குடி ஒன்றிய தகவல் தொழில்நுட்ப சேனை செயலாளர் தடியச்சாமி அவர்கள், இளையான்குடி ஒன்றிய துணை தகவல் தொழில்நுட்ப சேனை செயலாளர் ச.முருகானந்தம்
அவர்கள் மற்றும் முரளி தேவன், வழக்கறிஞர் அடைக்கலம், ரகுவீர பாண்டியன், கஜேந்திரபாண்டியன் உள்ளிட்ட பெருந்திரளான நிர்வாகிகள், உறுப்பினர்கள் மாமன்னர் முத்துவடுகநாத தேவர் நினைவிடத்தில் மாலை
அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.
இளைய ராணி கெளரி நாச்சியார்
நினைவிடத்திலும், காளையார்கோவில்
ஆலத்தியத்திற்குள் இருக்கும் முத்துவடுகநாதத் தேவர் சிலைக்கும் மாலை அணிவித்து
புகழ்வணக்க முழக்கம் எழுப்பப்பட்டது. மாநில அமைப்பாளர் சு.புதுமலர் பிரபாகரன்
அவர்களுக்கு அறக்கட்டளை மூத்த நிர்வாகி உருவாட்டி பொன்னுசாமித்தேவர் அவர்கள் விழாக்குழுவின்
சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.